ரஜினியின் இளைய மகளான செளந்தர்யா, நடிகரும் தொழிலதிபருமான விசாகனைத் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்.
இவர்களுக்கு வருகிற 10-ம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது.
இன்று செளந்தர்யா – விசாகன் திருமண வரவேற்பு, கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் இந்தத் திருமண வரவேற்பில் கலந்து கொண்டனர்.
பொதுவாக, திருமணத்துக்கு வந்து வாழ்த்துபவர்களுக்குத் தாம்பூலப்பை கொடுப்பதுதான் வழக்கம். இன்னும் சிலர் மரக்கன்றுகளைக் கொடுக்கின்றனர். ரஜினி வித்தியாசமாக விதைப்பந்து கொடுத்து விருந்தினர்களை அசத்தியுள்ளார்.
அந்த விதைப்பந்தில் உள்ளது வேப்ப மரத்தின் விதைகள் என்ற தகவலும் அதில் இடம்பெற்றுள்ளது.