மகள் இம்முறை க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு தோற்றுவதால் தந்தையொருவரின் இறுதிச் சடங்கு தள்ளிப் போடப்பட்ட துயர சம்பமொன்று வவுனியாவில் பதிவாகியுள்ளது.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த கணேசலிங்கம் வேகாவனம் வவுனியாவில் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த வாரம் வேகாவனம் இரவு உணவு உட்கொண்ட நிலையில் திடீர் உடல் பாதிப்பு காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கடந்த 7ஆம் திகதி கொழும்பில் தனியார் மற்றும் அரச வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்ற போதும் கடந்த 9ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் தந்தையின் இழப்பு ஒரு புறமிருக்க விஸ்ணுகாவின் பரீட்சைக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்ற வகையில் விஸ்ணுகா பரீட்சை எழுதி முடியும் வரை தந்தையின் இறுதிக் கிரிகைகளை ஒத்திவைத்துள்ளதாக தெரிய வருகின்றது.
பரீட்சை நாளைய தினம் நிறைவுற்றதும் மதியம் 2 மணிக்கு வேகாவனத்தின் இறுதிச் சடங்குகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.