சிபிசிஐடி கஸ்டடி முடிவடைந்ததை தொடர்ந்து மணிவண்ணன் கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
பொள்ளாச்சி கல்லூரி மாணவி பாலியல் விவகாரம் தொடர்பாக போலீசில் புகார் செய்த மாணவியின் அண்ணனை தாக்கியதாக, பொள்ளாச்சியை சேர்ந்த செந்தில் (33), பாபு (26), வசந்தகுமார் (29), பார் நாகராஜன் என்கிற முத்துசாமி (28) ஆகிய நான்கு பேரை போலீசார் கைதுசெய்தனர். பின்னர், ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய ஐந்தாவது குற்றவாளி மணி என்கிற மணிவண்ணன் தலைமறைவாக இருந்தார்.
இவர், கடந்த இரு வாரங்களுக்கு முன்பு கோவை கோர்ட்டில் சரணடைந்தார். பின்னர், கோவை சிறையில் அடைக்கப்பட்டார். இவரை சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணை நேற்று முன்தினம் நிறைவுபெற்றது. இதையடுத்து வரும் வெள்ளிக்கிழமை அன்று மணிவண்ணனை காவலில் எடுத்து விசாரிக்கப்படவுள்ளதாக சிபிசிஐடி போலிஸார் தெரிவித்துள்ளனர்.