பொள்ளாச்சி பாலியல் பலாத்கார கும்பலிடம் சிக்கிய சென்னை பெண் மருத்துவர்! பகீர் தகவல்கள்!

0

பொள்ளாச்சி பாலியல் பலாத்கார கும்பலிடம் சென்னையைச் சேர்ந்த பெண் மருத்துவர், கோவையைச் சேர்ந்த பல்கலைக்கழக பேராசிரியை உள்ளிட்டோர் சிக்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளங்கள் மூலம் மாணவிகள், இளம்பெண்களை வலையில் வீழ்த்திய பொள்ளாச்சியை சேர்ந்த ஒரு கும்பல் அவர்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி பணம், நகை பறித்த வழக்கில் தினந்தோறும் அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி வருகிறது.

இதுதொடர்பாக கல்லூரி மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் திருநாவுக்கரசு, சபரி ராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கும்பலால் பாதிக்கப்பட்டவர்களில் சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர், கோவையை சேர்ந்த பல்கலைக்கழக பேராசிரியை என 50-க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.

இவர்கள் தொடர்பான வீடியோக்களை ஆய்வு செய்து வரும் பொலிசார் அவர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது

இந்த கும்பல் கடந்த 7 ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்ட பெண்களை தங்களது வலையில் வீழ்த்தி, பலாத்காரம் செய்து வீடியோ எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த கும்பலின் பின்னணியில் மேலும் பலர் இருப்பதாக கூறப்படும் நிலையில், கைதான 4 பேரை தவிர வேறு யாருக்கும் இவ்வழக்கில் தொடர்பு இல்லை என பொலிசார் மறுத்து வருகின்றனர்.

Previous articleபொள்ளாச்சியில் நடந்து பாலியல் துஷ்பிரயோக சம்பவம்! கொதித்து போன பிரபலத்தின் மனைவி!
Next articleவைரலாகும் நடிகர் சிம்பு ஆக்ரோஷமாக பேசிய வீடியோ! பொள்ளாச்சியில் நடந்தது போன்ற கொடூர சம்பவங்களை தடுப்பது எப்படி!