பொலிஸ் அதிகாரியின் பரிதாபநிலை! 64 வயதில் வேலைக்கார பெண் மீது ஆசைப்பட்டதால் நேர்ந்த கதி!

0
677

சென்னை அடையார் கெனால் பேங்க் பகுதியை சேர்ந்தவர் கலைவாணன் 64 வயதான இவர் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர். இவருக்கு ஒரு குடும்பம் உள்ளது. இந்த நிலையில் 2005ம் ஆண்டு முதல் ஒரு பெண் இவரது வீட்டில் வேலைக்கு சேர்ந்துள்ளார். அந்த பெண்ணின் அழகு, தோற்றத்தை பார்த்ததும் கலைவாணனுக்கு அவரை மிகவும் பிடித்து போயிற்று.

சண்டை
ஒருகட்டத்தில் தன் வீட்டில் வேலை செய்த பெண்ணை கல்யாணமே செய்து கொண்டார். இந்த விஷயம் முதல் மனைவிக்கு தெரிந்துவிடவே குடும்பத்தில் சண்டை ஏற்பட்டது. இதனால் வேலைக்காரப் பெண்ணை பிரிய வேண்டிய சூழ்நிலைக்கு கலைவாணன் ஆளானார்.

ஆனாலும் மனம் முழுவதும் அப்பெண்ணே நினைத்திருந்தார். அவரை கலைவாணனால் மறக்கவே முடியவில்லை.

இப்படி திருமணமான ஒருவரை திருமணம் செய்து வாழ்க்கையை வீணாக்கி கொண்டதுடன், கலைவாணனின் குடும்பத்தையும் கஷ்டப்படுத்தி விட்டோமே என வேலைக்காரப் பெண் நினைத்தார்.

வேறு திருமணம்
இதனால் கலைவாணனை விட்டு விலகிய அவர் 2 மாதத்திற்கு முன்பு வேறு ஒருவரையும் திருமணம் செய்து கொண்டார். இந்த விஷயத்தை அறிந்த கலைவாணன் உடனே அந்த பெண்ணுக்கு போன் மேல் போன் செய்து தொந்தரவு செய்ய ஆரம்பித்தார்.

இப்படி தானும் வாழாமல், தன்னையும் வாழவிடாமல் தொடர்ந்து போன் செய்யவும், அந்தபெண் அடையாறு மகளிர் பொலிசில் புகார் செய்தார்.

இதனால் இரு தரப்பையும் பொலிசார் அழைத்து பேசினர். இளம்பெண்ணின் வாழ்க்கையில் இனி தலையிடக்கூடாது என்று எழுதி வாங்கி கொண்டனர். அதேபோல அந்த பெண்ணுக்கும் புத்திமதி கூறி அனுப்பி வைத்தனர்.

பொலிஸ் ஸ்டேஷன் வரை சென்று வந்தும் கலைவாணனுக்கு அவமானமோ, அசிங்கமோ ஏற்படவேயில்லை. எண்ணம் முழுவதும் அந்த பெண் மீதே இருந்தது. இதனால் நாளுக்கு நாள் உடல்நிலையும் பாதிக்கப்பட்டது.

மீண்டும் தொந்தரவு!
இரண்டு தினங்களுக்கு முன்பு, அந்த பெண் போரூருக்கு வந்திருப்பதாக கலைவாணனுக்கு தகவல் வந்தது. இதையடுத்து ஆர்வத்துடன், ஆசையுடன் போரூர் சென்றார் கலைவாணன். ஆனால் அங்கே அந்த பெண் எங்கோ வெளியில் சென்றிருந்தபடியால் ஏமாற்றத்துடன் தன் வீட்டுக்கு வந்துவிட்டார்.

இந்த விஷயம் அந்த பெண்ணுக்கு தெரியவந்ததும், ஆத்திரமடைந்தார். இப்படி தன்னை நேரிலும் வந்து தொந்தரவு கொடுத்தால் என்ன அர்த்தம் என்று கலைவாணன் வீட்டுக்கே வந்து சண்டை போட ஆரம்பித்துவிட்டார்.

இவ்வளவு அன்பாக இருந்தும், எவ்வளவு நடந்தாலும் தேடி தேடி சென்றாலும் தன்னை வேலைக்கார பெண் ஏற்றுக் கொள்ளவில்லையே என்று மனம் உடைந்தார்.

தற்கொலை!
அன்றைய இரவே கலைவாணன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்து, அடையார் பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தபோதுதான் இவ்வளவு உண்மைகளும் தெரியவந்தது.

Previous articleபுதிதாக வந்த ஆண் நண்பர்… பரிதவிக்கும் நிலானியின் இரண்டு குழந்தைகள்! பிக் அப்.. பிரேக் அப்..
Next articleகாமெடி பீஸாக மாறிய காணொளி !நேரலையில் நிரூபர் செய்த காரியம்..!