பொலிசாருக்கு பொதுமக்கள் மலர் தூவி மரியாதை செய்தனர்! நீங்க தான் ரியல் ஹீரோ!
பிரியங்காவை கற்பழித்து கொன்ற குற்றவாளிகள் நால்வரை என்கவுண்டரில் சுட்டுக்கொன்ற பொலிசாருக்கு பொதுமக்கள் மலர் தூவி மரியாதை செய்தனர். ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் பிரியங்கா கொடூரமாக கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் முகமது ஆரிப், சிவா, நவீன், கெஷ்வலு என நால்வர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு விரைந்து தண்டனை வழங்க கோரி போராட்டங்கள் வெடித்த நிலையில் இன்று நால்வரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இங்கே கிளிக் செய்து படங்களை பார்வையிடவும்!
குறித்த பொலிஸ் அதிகாரிகளுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர், அப்பகுதியில் கூடிய மக்கள் மலர் தூவி தங்களது கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினர். இதுபோன்ற குற்றவாளிகளுக்கு இதுவே சரியான தண்டனை என பலரும் பொலிசிடம் தங்களது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதேபோன்று சைபராபாத் கமிஷ்னர் சஜ்னாருக்கு மக்கள் பெரிய அளவில் வரவேற்பு கொடுத்துள்ளனர். ஏசிபி சிந்தாபாத், டிசிபி சிந்தாபாத் என்று அவர்கள் கோஷம் எழுப்பி வருகிறார்கள். அதோடு கமிஷ்னர் சஜ்னார்தான் எங்கள் ஹீரோ என்று மக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இங்கே கிளிக் செய்து படங்களை பார்வையிடவும்!