பேஸ்புக் இலங்கையில் தடை செய்யப்படுமா?

0

இலங்கையில் சமூகவலைத்தளமான பேஸ்புக் தடை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்வதாக தகவல் வெளியாகி இருந்தது.

எனினும் அதனை மறுக்கும் அரசாங்கம், அது போலியான தகவல் என நேற்று அறிவித்துள்ளது.

இது விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட, அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக களுவெவ இந்தத் தகவலை வெளியிட்டார்.

இலங்கையில் பேஸ்புக் அல்லது வேறு எந்த ஒரு சமூகவலைத்தளத்தையும் தடை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமைத்திரி பிறப்பித்துள்ள உத்தரவு! குழப்பத்தில் கொழும்பு அரசியல்!
Next articleநாளை நாட்டில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்!