பேய்கள் இருப்பதை யாரெல்லாம் உணர முடியும்? நமது கண்களுக்கு தெரிவதில்லை ஏன்!

0
989

பேய்கள் உண்மையில் இருக்கிறதா? இல்லையா? என்பது உலகம் தோன்றிய காலம் முதல் இன்றுவரை விடை தெரியாத கேள்வியாக நீண்டு கொண்டு இருக்கிறது.

பேயை பார்த்தேன் என்று பலரும் கூறுவதுண்டு, ஆனால் மனிதர்கள் கண்டறிந்த வரையில் பேய்களின் இருப்பை உணர முடியுமே தவிர அவற்றை மனிதர்களால் பார்க்க இயலாது. ஏன் நமது கண்களால் பார்க்க இயலாது என்பதை தற்போது பார்க்கலாம்.

ஆவிகள் என்ற வார்த்தையை கேட்டாலே அனைவரும் அலறத் தொடங்கிவிடுவார்கள், நம்மைச் சுற்றி நல்ல ஆன்மாக்களும் இருந்து கொண்டு தான் இருக்கின்றது. நாம் அவைகளை தொந்தரவு செய்யாமல் இருக்கும் வரை நமது வாழ்விலும் அது குறிக்கிடாதாம்.

அதிக உணர்திறன் கொண்ட சிலர் தங்களை சுற்றி ஆன்மாக்கள் இருப்பதை உணர்வதாகவும், சில பார்ப்பதாகவும் கூறுகிறார்கள். ஆனால் பலரும் இதனை ஒப்புக்கொள்வதில்லை. இது உங்களின் உள்ளாற்றல் தான் உள்ளது.

ஒருவர் இறக்கும் போது அவரின் உடல் மட்டும் அழிகிறது, அவர்களின் இறுதிச்சடங்கு சரியான முறையில் நடந்திருந்தால் அவர்களின் ஆன்மா இவ்வுலக வாழ்வில் இருந்து விடுவிக்கப்படுகிறது. ஒருவர் இயற்கைக்கு அப்பாற்பட்ட முறையில் அகால மரணம் அடைந்தால் அது ஆன்மாவாக அலைவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

நமது உடல் நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என்ற பஞ்ச பூதங்களால் ஆனது. நாம் உயிருடன் இருக்கும்போது நிலம் மற்றும் நீரை சார்ந்து இருக்கிறோம், ஆனால் ஆன்மாக்கள் காற்று என்னும் ஒரு மூலக்கூறால் மட்டுமே ஆனவை. அதனால்தான் அவற்றை நம் கண்களால் பார்க்க முடிவதில்லை.

பொதுவாக ஆன்மாக்கள், எதிர்மறை இடங்களில் தான் காணப்படும். இதனால்தான் நமது சுற்றுப்புறத்தை எப்பொழுதும் தூய்மையாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது. எதிர்மறை இடங்கள் ஆன்மாக்களை எளிதில் ஈர்க்கும்.

மனிதர்களுக்கு பேய் பிடிக்கும் என்பது பழங்காலம் முதலே இருக்கும் ஒரு நம்பிக்கையாகும். பேய் பிடித்தவர்கள் எப்படி இருப்பார்கள் என்பதற்கான அறிகுறி சில நேரம் அதிகமாகவும், சில நேரம் குறைவாகவும் சாப்பிடுவார்கள். மேலும் அதிக நேரம் தூங்குபவர்களாக இருப்பார்களாம்.

மற்றவர்களால் தனிமைப்படுத்தபட்டவர்கள் அல்லது விரும்பி தனிமையை ஏற்றவர்கள், எப்பொழுதும் மனஅழுத்ததில் இருப்பவர்கள் போன்றவர்களால் ஆன்மாக்களின் இருப்பை உணர முடியும்.

பொதுவாக வீடு, அலுவலகம், மூடிய இடங்களில் நீங்கள் ஆன்மா இருப்பதாக உணர்ந்தால் அவர்கள் உங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களாகவோ அல்லது உங்களை ரொம்ப விரும்பியவர்களாகவோ இருப்பார்கள். உங்களை சுற்றி ஆன்மாக்கள் இருந்தால் அறையில் திடீரென வெப்பநிலை குறைந்துவிடும்.

சிலசமயம் ஆன்மாக்கள் நம் கற்பனையால் உருவானதாகக் கூட இருக்கலாம். அதற்கு காரணம் நமது மனஅழுத்தம், பூமியின் மின்காந்த விளைவு என எதுவாக வேண்டுமென்றாலும் இருக்கலாம். இந்த பிரபஞ்சம் பல்வேறு விதமான அதிர்வுகளை வெளியீட்டுக்கு கொண்டே தான் இருக்கிறது. வெளியுலகில் இருந்து வரும் அதிர்வுகளை உங்களால் பெற முடிந்தால் உங்களுக்கு பேய்களை பார்க்கக் கூடிய வாய்ப்பு கிடைக்கலாம்.

Previous articleசளி என்பது என்ன? அகற்ற என்ன செய்யலாம்! முழுமையான தகவல்கள் !
Next articleஅழகான அடர்த்தியான கூந்தலை பெற வேண்டுமா?.. இவற்றை பயன்படுத்தி வாருங்கள்..!