கடந்த பொங்கலுக்கு வெளிவந்த பேட்ட மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்கள் தற்போதும் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.
கடந்த வெள்ளிக்கிழமை வந்தா ராஜாவாதான் வருவேன், சர்வம் தாளமயம் மற்றும் பேரன்பு என மூன்று புதிய படங்கள் வெளிவந்தது. ஆனால் அவற்றின் வசூல் மிகக்குறைவு தான்.
அது பற்றி கருத்து தெரிவித்துள்ள நடிகர் சித்தார்த் ‘ஏன் சின்ன பட்ஜெட் படங்களை பேட்ட-விஸ்வாசத்தோடு ஒப்பிடுகிறீர்கள்?” என கோபமாக கேட்டுள்ளார்.
மேலும் பிளாக்பஸ்டர் ஆகும் படங்களில் கண்டெண்ட் இல்லை என யாரும் விமர்சனம் செய்வதில்லை ஆனால் சின்ன பட்ஜெட் படங்களின் வசூலை மட்டும் ஒப்பிடுவது சரியில்லை.




