பெல்ஜியம் வீராங்கனை கருணைக்கொலை நெஞ்சத்தைப்பதறவைக்கும் தகவல்!

0

பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற, மாற்றுத்திறனாளியான பெல்ஜியம் வீராங்கனை மரியகே, அவரது விருப்பப்படி கருணை கொலை செய்யப்பட்டார்.

பெல்ஜியத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி வீராங்கனை மரியகே வெர்வூர்ட். தன்னுடைய 14வது வயதில் ‘டிஜெனரேட்டிவ்’ என்ற தசை நோயால் பாதிக்கப்பட்டார். முதுகுத்தண்டு சம்பந்தமான இந்த நோய், நாட்கள் செல்ல செல்ல மூளைப்பகுதிக்கும், தசைகளுக்கும் இடையிலான தொடர்பை துண்டிக்கும். ஒரு கட்டத்தில், பக்கவாதம் ஏற்படும். இப்படிப்பட்ட ஆபத்தான நோயில், சிக்கியபோதும் மரியகே மனம் தளராமல் பல்வேறு போட்டிகளிலும் தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் போராடினார்.

ஒவ்வொரு நாளும் வலியோடு போராடிய மரியகே ,பெல்ஜியம் நாட்டில் கருணைக்கொலைக்கு அனுமதி இருப்பதால் 2008ம் ஆண்டில் கருணைக்கொலைக்கான சட்டப்பூர்வ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். தனது வலியுடனான வாழ்க்கைக்கு விடை தர எண்ணினார். பெல்ஜியத்தில் உள்ள டயஸ்ட் நகரில் ஒப்பந்தபடி, நேற்றுமுன் தினம் கருணை கொலை செய்யப்பட்டார்.கடும் வலியோடு நோயுடன் போராடிய வாழ்க்கைக்கு 40வது வயதில் விடை கொடுத்தார்.

மரியகே ஜென் என்ற பெயரிடப்பட்ட லேப்ரடார் வகை நாயை வளர்த்தார் மரியகே. இதன் மீது எல்லையில்லா அன்பு வைத்திருந்தார். தசை நோய் தாக்கத்தில் இருந்த நேரத்தில் , மரியகேயின் ‘காலனி ,கீழே விழும் பொருட்கள் எடுத்து வருவது என பல வழிகளில் உதவி உள்ளது.

மரியகே மைதானத்தில் பயிற்சி பெறும்போது எதை நான் கீழே தவறவிட்டாலும், ஜென் எடுத்து தரும். நான் சுயநினைவை இழந்தால் உடனே சமயோசிதமாக குரைப்பதன் மூலம் ‘ தாதியை ‘ அழைக்கும். நான் சகஜநிலைக்கு வரும் வரை,எனது முகத்தை நாக்கால் வருடிவிடும் அது பெரிய ஆறுதல் எனக்கு . ஜென் இல்லாத வாழ்க்கையை நினைத்து கூட பார்க்க முடியவில்லை. என்று மாற்றுத்திறனாளியான மரியகே தெரிவித்திருந்தார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசொக்லேட் ஒரு லட்சம் ரூபாய்!
Next articleமுடி வளர்ச்சியை அதிகரிக்க வேண்டுமா? வேப்ப எண்ணெயை இப்படி யூஸ் பண்ணுங்க !