பெற்ற மகளை கழுத்தை நெரித்து கொன்று புதைத்த பெற்றோர்! கண்கலங்க வைக்கும் காரணம்!

0

பெற்றோர்களே தங்களுக்கு பிறந்த குழந்தை ஊட்டச்சத்து குறைபாடு கொண்டதாக பிறந்ததால் மகளை கொன்று புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலம் மொரதாபாத்தை சேர்ந்தவர் அனந்தபால். இவருக்கு 6 வயதில் தாரா என்ற பெண் குழந்தை உள்ளது. சிறுமி தாரா ஊட்டச்சத்து குறைபாடு கொண்டவர். மேலும் ரிக்கெட்ஸ் நோய் பாதிப்பும் இருந்துள்ளது.

இந்நிலையில் குழந்தை என்றும் பாராமல் பெற்றோர்களே சேர்ந்து கொன்று புதைத்துள்ளனர். இதுகுறித்து அனந்தபாலின் பக்கத்து வீட்டுக்காரர் பொலிசில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மந்திரவாதி ஒருவர் அனந்தபாலிடம் சிறுமி தாராவை வீட்டிலேயே கொன்று புதைத்தாள் உங்களுக்கு பிறக்கும் அடுத்த குழந்தை ஆரோக்கியமானதாக இருக்கும் என கூறியுள்ளார். அனந்தபாலிக்கு ஏற்கனவே ஒரு மகள் உண்டு, அவரும் ரிக்கெட்ஸ் நோய் பாதிப்பு உண்டு.

எனவே ஆரோக்கியமான குழந்தை வேண்டும் என்ற எண்ணத்தில் மந்திரவாதியின் பேச்சைக் கேட்டு இவ்வாறு செய்துள்ளனர்.

பொலிசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அறிக்கையில் தாரா கழுத்து நெரித்து கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பொலிசார் தாராவின் பெற்றோர்களை தேடி வருகின்றனர்.

Previous articleதினசரி உணவாக வெறும் பாதாமை இந்த மாதிரி சமைத்து சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்!
Next articleயாழில் இருந்த சாத்திரக்காரர்களை கைது செய்து விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்ற அதிகாரிகள்!