பெற்ற தாயை கொலை செய்த‌ மகன்! சிசிடிவி காட்சியால் வெளிவந்த உண்மை!

0

இந்தியாவில் தாய் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார் என பொலிசார் நினைத்திருந்த நிலையில் அவர் மகனே மாடியிலிருந்து தள்ளிவிட்டு கொலை செய்திருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட்டில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது.

ஜெர்ஸ்ரீபென் நன்வனி (64) என்ற பெண் தனது மகன் சந்தீப் என்பவருடன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.

இந்நிலையில் வீட்டில் மொட்டை மாடியிலிருந்து கீழே குதித்து கடந்த செப்டம்பர் மாதம் நன்வனி தற்கொலை செய்து கொண்டார்.

சிசிடிவி காட்சியால் வெளிவந்த உண்மை
சிசிடிவி காட்சியால் வெளிவந்த உண்மை

இந்நிலையில் இது சம்மந்தமான வழக்கை பொலிசார் மீண்டும் விசாரித்த நிலையில் பெற்ற தாயை சந்தீப் கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.

அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள சிசிடிவி கமெரா மூலம் சந்தீப் சிக்கியுள்ளார்.

அதன் விபரம் வருமாறு,

நன்வனி சில காலமாக நோய் காரணமாக படுத்த படுக்கையாக இருந்துள்ளார். சந்தீப் தனது தாய்க்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சையளித்து வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் நன்வனியை கவனித்து கொள்வதில் சந்தீப்புக்கு சலிப்பு ஏற்பட்டு அது வெறுப்பாக மாறியுள்ளது.

இதையடுத்து தாயை கொலை செய்ய முடிவெடுத்த சந்தீப் அவரை மாடிக்கு அழைத்து சென்று அங்கிருந்து கீழே தள்ளி கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியுள்ளார்.

இது சம்மந்தமான சிசிடிவி காட்சிகளை வைத்து தற்போது பொலிசார் சந்தீப்பை கைது செய்துள்ளனர்.

பெற்ற தாயை கொலை செய்த‌ மகன்!
பெற்ற தாயை கொலை செய்த‌ மகன்!

Previous articleஅன்று இருவரும் சேர்ந்து எடுத்த அந்த நெருக்கமான புகைப்படம் தான் எங்களது காதலை சிதைத்தது!
Next articleசகோதரியை காப்பாற்ற பட்டாதாரி சகோதரி செய்த தியாகம்!