பெற்றோர் வீட்டில் இல்லாதவேளை 12 வயது சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்!

0

மொனராகல மாவட்டத்தில் தமணவில – செவனகல பிரதேசத்தில் வசிக்கும் 12 வயது சிறுமியை துஸ்பிரயோகத்திற்குட்படுத்திய இரு இளைஞர்களை நேற்று இரவு செவனகல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் குறித்த இளைஞர்கள் அங்கு சென்று சிறுமியை துஸ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பெற்றோர் வீட்டிற்கு வந்த பிறகு சிறுமி தனக்கு நேர்ந்த விபரீதத்தை கூறியுள்ளார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் செவனகல பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முறைப்பாடு செய்துள்ளனர்.

சந்தேக நபர்கள் இருவரும் அதே பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுவதுடன், 18 மற்றும் 28 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்களை இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக செவனகல பொலிஸார் குறிப்பிட்டனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைகளுக்காக வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Previous articleஆண்களின் விந்தணு உற்பத்தியை அதிகரிக்க உதவும் அந்த அற்புத இலை !
Next articleகேரள வெள்ளத்திலும் ஆண்களுக்கு ஆணுறை வேண்டும் என கொச்சைப்படுத்திய வாலிபர்!