பெண் சாமியார் ராதே மா நள்ளிரவில் பக்தர்களுடன் ஆபாச குத்தாட்டம் ஆடி கலக்கியதால் சர்ச்சை!!

0

பெண் சாமியார் ராதே மா நள்ளிரவில் பக்தர்களுடன் ஆபாச குத்தாட்டம் ஆடி கலக்கியதால் சர்ச்சை!!

பெண் சாமியார் ஒருவர் தனது ஆதரவாளருடன் முகம் சுழிக்கும் வகையில் ஆபாச நடனமாடியது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
அக்டோபர் 12, 2017, 10:46 AM
மும்பையின் போரிவிலி பகுதியைச் சேர்ந்தவர் ராதே மா. பெண் சாமியாரான இவர் அடிக்கடி சர்ச்சைகளை உருவாக்கி பரபரப்பை ஏற்படுத்துவார்.

இந்நிலையில் இவர் தனது ஆதரவாளர் ஒருவருடன் முகம் சுழிக்கும் வகையில் ஆபாச நடனம் ஆடிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

குறித்த விடியோவில் நவ நாகரீக உடை அணிந்து இருக்கும் ராதே மா மெதுவாக நடன அசைவுகளை வெளிப்படுத்துகிறார்.அப்போது அவரது அருகில் இருக்கும் ஆதரவாளர் ஒருவர் ராதே மாவுடன் நடனம் ஆட விரும்ப, அவருடன் சேர்ந்து ஆடுகிறார். அதன் பின் அவர் ராதே மாவை தூக்கி வைத்துக் கொண்டு நடனமாடியது தான் சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களை சம்பாதித்துள்ளது.சமீபத்தில் டெல்லி காவல் நிலையம் ஒன்றில் காவல் அதிகாரியின் இருக்கையில் இவர் அமர்ந்திருக்க, அதிகாரி கைகட்டி நின்ற சம்பவம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமொபைலுக்கு பதிலாக காலி பெட்டிகள் மட்டுமே வந்ததாக பொய் கூறி சுமார் ரூ.54 லட்சம் மோசடி!!
Next articleதந்தையின் சமையலால் பறிபோனது சிறுமியின் உயிர்!!