பெண்கள் மருதாணி வைக்கும்போது அதன் நிறம் இப்படி வந்தால் என்ன அர்த்தம்!

0
897

நம் முன்னோர்கள் அந்தக் காலத்தில் பெண்களுக்கு கையில் மருதாணி வைத்து அழகுப்படுத்தி பார்ப்பார்கள். அக்காலத்திலே பெண்கள் திருமணம் செய்ய போகும் தன் கணவரை பார்க்காமலே திருமணம் செய்யும் காலம் அது.

அப்படிப்பட்ட அந்த காலத்தில் ஒரு பெண்ணிற்க்கு வரப்போகும் கணவனின் குணாதிசயங்களை கண்டுபிடிக்க இந்த மருதாணியின் முலமாக தெரிஞ்சிக்க முடியும் என நம்பினார்கள்.சிறந்த நிவராணி மருதாணி அதன் வாயிலாகவே மருதாணியை பெண்ணின் கையில் எந்த அளவுக்கு சிவக்கிறதோ அதை வைத்து பல விஷயங்கள் தெரிந்து கொள்ளவும் முடிந்தது நம் முன்னோர்களால்.

அதுமட்டுமில்லாமல் மருதாணி உடல்நலம் காக்கும் மருத்துவப் பொருளாகவும் ஆயுர்வேதத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது.

சிவந்த நிறமும், அதன் பயனும் :

திருமணமாக இருக்கும் பெண்ணின் கையில் மருதாணியை இடுவதன் மூலமாக மருதாணி சரியான நிறத்தில் சிவந்து காணப்பட்டால் அந்த பெண்ணின் கணவன் அவள்மேல் அன்பு அதிகமாக இருக்கும் என்ற அர்த்தமாகும்.மருதாணி வைப்பது அதுமட்டுமில்லாமல் மருதாணியை சரியான நிறத்தில் சிவந்தவர்களுக்கு குழந்தை பிறப்பு சரியான முறையில் இருக்கும் என்றும் ஆயுர்வேதம் கூறுகிறது.

அதனால் பெற்றோர்கள் தன் மகளின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என நினைந்து பெருமைப்படுவார்கள்.

ஆரஞ்சு நிறமும், அதன் பயனும் :

மருதாணியை சில பெண்ணின் கையில் ஆரஞ்சு நிறமாக இருக்கும். சரியாக சிவக்கவே சிவக்காது.மருதாணி மருதானி சிவக்காமல் மஞ்சள் நிறத்தில் இருந்தால் அது சீதள உடம்பை குறிப்பதாகும்.

அடர் சிவப்பு நிறமும், அதன் பயனும் :

மருதாணியை சில பெண்ணின் கையில் அடர் சிவப்பில் பார்க்க அவ்வளவு அழகாக இருக்கும். அதிலும் ஒரு சிலருக்கு கை கருத்தே போய்விடும். அப்படி இருக்கும் உடம்பில் அதிகம் பித்தம் இருக்கும் என்பார்கள். இந்த இரண்டு நிறத்திலும் இருந்தால் கருத்தரிப்பது தாமதமாகும் என்கிறது ஆயுர்வேதம்.

அந்தக் காலமாக இருந்தாலும் சரி, இந்த காலமாக இருந்தாலும் சரி மருதாணியை விரும்பாத மங்கையர் உண்டா? நீங்களே சொல்லுங்கள் நண்பர்களே!

Previous articleரசிகருடன் நெருக்கமாக லொஸ்லியா இலங்கை விமான நிலையத்தில் லொஸ்லியா கூறியது என்ன?
Next articleசெவ்வாயின் சிறப்புக்கள் பலம் வாய்ந்த செவ்வாய் ! செவ்வாய் ஒரு பரிபூரண ஆண் கிரகம் என்பதால் ஒரு பெண்ணுக்கு!