பெண்கள் இந்த 7 வகையான ஆண்களிடம் பழகமாட்டார்களாம்!!

0
1039

ஆண்களே தெரிந்து கொள்ளுங்கள் பெண்கள் இந்த 7 வகையான ஆண்களிடம் பழகமாட்டார்களாம்!!

பெண்களிடம் ஆண்கள் பேசும் போது இதனை கருத்தில் வைத்துக்கொள்ளுங்கள். என்னெறால் அவர்களுக்கு இப்படி எல்லாம் செய்தால் பிடிக்காதாம்.

”நான் இதுவரைக்கும் யார பார்த்தும் கல்யாணம் பண்ணிக்கலாம்-னு யோசிச்சதே இல்லை உன்ன பாக்குற வரைக்கும” என டசாக டயலாக் பேசும் ஆண்களுடன் பெண்கள் உடனே தொடர்பை நிறுத்தி விடுவார்கள். ஏன் என்றால், இவர்கள் எல்லாரிடமும் இப்படி தான் கூறுவார்கள் என பெண்கள் எண்ணுகின்றனர்.

நான் எல்லோரிடமும் மிக ஜோவியலாக இருப்பேன், சோசியல் பர்சன் என்ற பெயரில், உடன் இருக்கும் போதெல்லாம் யாருடனாவது போனில் பேசிக் கொண்டிருக்கும் நபருடன் பெண்கள் பழக விரும்பிவதில்லையாம். இவர்கள் எப்போது உடன் இருப்பவர்களுக்கு முக்கியத்துவம் தரமாட்டார்கள் என்ற எண்ணம் அவர்களிடம் உண்டாகிவிடும்.

எதற்கெடுத்தாலும் மிகவும் யோசித்து, தயங்கி தயங்கி பேசும் ஆண்களை பெண்கள் விரும்புவதில்லை. இவர்களுடன் இருந்தால் ஒரு நாள் கூட ஒரு யுகம் போல மெதுவாக நகரும் என்ற எண்ணமாம்.

தன்னுடன் பழகும் ஆண் மிக ரிச்சாக இருக்க வேண்டும் என்றெல்லாம் பெண்கள் ஆசைப் படுவதில்லையாம். பார்த்ததும் பழகி பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டும் நபராக இருப்பதுதான் ஆர்வத்தை தூண்டும் என்கின்றனர் பெண்கள்.

பணிவான ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும். ஆனால், அதற்காக எல்லாவற்றுக்கும் அடங்கி போகும் ஆண்களை பெண்கள் நேசிப்பதில்லை. கோபப்பட வேண்டிய இடத்தில் கோபப்பட வேண்டும். கெத்தாக நடந்து கொண்டால் மிக பிடிக்குமாம்.

தான் இப்படி, அப்படி என்று பெருமை பீத்திக்கொள்ளும் ஆண்களை பெண்கள் விரும்புவதில்லை. இவர்கள் அதிக ஈகோ காண்பிப்பார்கள். பெண்களை தங்களுக்கு கீழ் இருக்கும்படி பார்ப்பார்கள் என்று எண்ணுவர்.

எல்லாவற்றிலும் கணக்கு பார்த்து ஒரு ப்ரோக்ராம் செய்த கணினி போல வாழ்க்கை நடத்தும் ஆண்களுடன் பழக பெண்கள் விரும்புவதில்லை. இவர்கள் பணத்தை மட்டும் தான் பார்ப்பார்கள், சந்தோசமாக இருக்க மாட்டார்கள் என பெண்கள் கூறுகின்றனர்.

Previous articleதங்களை விட வயது குறைந்த துணையை பெண்கள் நாடுவதற்கான காரணங்கள்!
Next articleபின்னழகை பெரிதாக்க சென்ற பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்: தலைமறைவான மருத்துவர்!