புத்தாண்டை கொண்டாட காதலனுடன் பறந்து சென்ற நயன்! எங்கு தெரியுமா?

0
1320

என் பேரழகியை அழைத்துக்கொண்டு லாஸ் வேகாஸ் போகிறேன். அவருக்கு மிக மிகவும் ஓய்வு தேவைப்படுகிறது. இந்த ஓய்வை எடுத்துக்கொள்ள அவ்வளவு தகுதி படைத்தவர் என் பேரழகி என்று உருகி வழிந்துள்ளார் நயன்தாராவின் காதலன் விக்னேஷ் சிவன்.

சில மாதங்களாகவே தனது காதலி நயனுடன் செலவழிக்கும் நெருக்கமான தருணங்களை ஒன்றுவிடாமல் தனது வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து தமிழ் வாலிப வயோதிக அன்பர்களின் நிம்மதியான தூக்கத்தைக் கெடுத்து, வயிற்றெரிச்சலையும் சம்பாதித்து வருகிறார் விக்னேஷ் சிவன்.

இந்நிலையில் நேற்று வெளியான விஸ்வாசம் ட்ரெய்லரில் நயனை அஜீத் அழைத்த பேரழகி என்ற அதே அடைமொழியுடன் கொஞ்சும் விக்னேஷ் சிவன் சில மணி நேரங்களுக்கு முன் நயனுடன் விமானம் ஏறினார்.

புத்தாண்டைக் கொண்டாடவும், ஓய்வெடுப்பதற்காகவும் உல்லாசமாக இருப்பதற்காகவும் இருவரும், அதாவது அவங்க இருவர் மட்டும் லாஸ் வேகாஸ் போகிறார்களாம். அதைப் படமாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் சிவன்.

கடந்த சில மாதங்களாக இடைவிடாத படப்பிடிப்புகளில் பிசியாக இருந்த நயனின் இந்த திடீர் அமெரிக்க பயணத்தால் அவர் 10ம் தேதி ரிலீஸாக இருக்கும் ‘விஸ்வாசம்’ பட பிரிமியர் ஷோக்களுக்கு ஆஜராவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Previous articleபுத்தாண்டு முதல் நாளில் புகழையும், பெருமையையும் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்!
Next articleதொழிலதிபரை காதலிக்கும் நடிகை தமன்னா? இந்த நாட்டை சேர்ந்தவரா?