கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் நடிகை பாவனா.
இதைத் தொடர்ந்து, கிழக்கு கடற்கரை சாலை, வெயில், தீபாவளி போன்ற ஒரு சில படங்களில் மட்டும் நடித்திருந்தார். இருப்பினும் தமிழ் இளைஞர்கள் மனதில் ஒரு நீங்கா இடத்தைப் பிடித்துள்ளார் நடிகை பாவனா.
இந்நிலையில், தற்போது மீண்டும் சினிமாவில் ரீஎண்ட்ரி கொடுக்க இருக்கும் நடிகை பாவனா சமீபத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டிருந்தார்.