பிரித்தானியாவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்ட அரீமா நஸ்ரின் (36 வயது) என்ற பெண் தாதி மரணமடைந்துள்ளார்.
உலகின் பல்லாயிரக் கணக்கான உயிர்களை குடிக்கும் ஓர் உயிர்கொல்லி நோயாக வலம் வந்து கொண்டிருக்கிறது கொரோனா. பிரித்தானியாவில் மூன்று பிள்ளைகளின் தாயான தாதியொருவர், நாட்டு மக்களுக்கு சேவை செய்து தன்னுயிரை நீத்துள்ளார்.
பிரித்தானியாவின் West Midlands இல் உள்ள Walsall Manor வைத்தியசாலையில் இவர் கடந்த 16 வருடங்களாகப் பணியாற்றிவந்துள்ளார்.
மேற்படி சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 16 ஆண்டுகள் தாதியாக பணி புரிந்த அரீமா என்ற பெண்ணொருவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். குறித்த தாதி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான நோயாளர்களுக்காக பணியாற்றியுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 16ம் திகதி கொரோனா தொற்று அறிகுறி ஏற்பட்டதைத் தொடர்ந்து ஒரு வாரத்தில் வைத்தியசாலையில் அணுமதிக்கப்பட்டிருந்தார். அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை மரணமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், அவர் கொரோனா தொற்றுக்குள்ளாயிருந்தமை கண்டறியப்பட்டது. உடனே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவரின், உடல்நிலை மோசமடைந்துள்ளது. பின்னர் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிருக்கு போராடிகொண்டிருந்தார்.
குறித்த தாதிக்கு 8,10 மற்றும் 17 வயதுடைய மூன்று பிள்ளைகளும் உள்ளதாக தெரியவருகிறது. கணவனை பார்க்க வேண்டும் என விரும்பிய அவரை, கணவன் சென்று பார்ப்பதற்கு வைத்தியர்கள் அனுமதிக்க வில்லை.
இருந்தும், தனக்கு தொற்று ஏற்பட்டாலும் பரவாயில்லை எனக்கருதி, மனைவியை சென்று பார்த்துள்ளார் கணவர். மனைவியிடம் குனிந்து காதருகே சென்று, “பிள்ளளைகள் குறித்து, நீ கவலைப்படாதே! நான் பார்த்துக் கொள்கின்றேன்..” என்று கூறியதும், அரீமாவின் கண்ணிலிருந்து கண்ணீர் வடிந்துள்ளது.
அந்ந வார்த்தையை கேட்பதற்காகாத் தான் உயிர் ஊசலாடிக்கொண்டிருந்ததோ தெரியவில்லை. அந்த வார்த்தையை கேட்டவுடனேயே உயிர் பிரிந்துள்ளது. மனைவியை கட்டியணைத்து, கதறி அழுதுள்ளார் கணவர். இவர், கென்டில் உள்ள ராணி எலிசபெத் த குயின் மதர் வைத்தியசாலையிலேயே மரணித்துள்ளார்.
இந்நிலையில், உயிரிழந்த அரீமாவின் உடலிற்கு வைத்தியசாலையின் ஊழியர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அஞ்சலி செலுத்தியுள்ளனர். குறித்த இச்சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இவர் விடுமுறையில் நின்ற காலப்பகுதியிலேயே இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கச் சந்தர்ப்பம் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.