Home thatstamil one india tamil oneindia tamil பிரிந்த காதல் பற்றி ஸ்ருதி ஹாசன் முதல் முறை மனம் திறந்தார்!

பிரிந்த காதல் பற்றி ஸ்ருதி ஹாசன் முதல் முறை மனம் திறந்தார்!

0
454

நடிகை ஸ்ருதி ஹாசன் கடந்த சில வருடங்களாக மைக்கேல் கார்சேல் என்பவரை காதலித்து வந்தார். அவர்கள் இருவரும் ஒன்றாக வெளியில் சுற்றும் புகைப்படங்களும் அதிகம் வெளியாகின. அவர்களுக்கு திருமணம் நடக்கவுள்ளது. என்றும் செய்திகள் பரவிய நிலையில், சில மாதங்களுக்கு முன்பு இருவரும் பிரிந்துவிட்டதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்தனர்.

அந்த காதல் பிரிவு பற்றி ஸ்ருதிஹாசன் தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் உருக்கமாக பேசியுள்ளார். “நான் ஒரு உணர்ச்சிபூர்வமான நபர். அதனால் தான் என்னுடன் இருப்பவர் என் மீது எளிதில் ஆதிக்கம் செலுத்திவிடுகிறார்கள். அதுவும் ஒரு நல்ல அனுபவம் தான்.”

“இப்போதும் என்னிடம் எந்த எதிர்பார்ப்புகளும் இல்லை. நல்லவர்கள் நன்றாக தான் நடந்துகொள்கின்றனர், சில சமயங்களில் தவறும் செய்கின்றனர். இதற்கு நான் வருத்தப்படவில்லை. ஒரு சிறந்த காதலை தேடிக்கொண்டிருக்கிறேன். அது வரும்போது ‘இதற்காகத்தான் காத்திருந்தேன்’ என உலகத்திற்கு அறிவிக்க காத்திருக்கிறேன்” என ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார்.

Previous article“நீயும் அங்கிருந்து வந்த ஆள் தானே” சிவகார்த்திகேயனை விளாசிய மீராமிதுன்!
Next articleசிக்கலுக்குள் மாட்டிக்கொண்டாரா நடிகை யாஷிகா !