பிரபல பாடசாலை மாணவனின் மோசமான செயல்!

0
523

ஓட்டமாவடியிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்று வரும் மாணவனிடமிருந்து 800 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பாடசாலை மாணவர்களுக்கு குறித்த மாத்திரைகளை விற்பனை செய்வதற்காக அவர் எடுத்துச் சென்ற போதே மாணவன் பொலிஸாரிடம் வசமாக சிக்கிக் கொண்டுள்ளார்.

செங்கலடிப் பிரதேசத்தில் வீதி பாதுகாப்புக் கடமையிலிருந்த ஏறாவூர் பொலிஸார், வாழைச்சேனை நோக்கிச் சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டியை சோதனையிட்டபோதே நேற்றிரவு இந்த மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட மாணவன் க.பொ.த உயர்தர வகுப்பில் கல்வி பயில்வதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleயாழில் விடிய விடிய ரவுடிகள் அட்டகாசம்! பெற்றோல் குண்டு வீச்சு: பதற்றத்தில் மக்கள்!
Next articleசீனாவின் கடன்சுமையால் இலங்கையில் நேற்று ஏற்பட்ட திடீர் மாற்றம்!