சினிமாவில் படத்துக்காக தன்னை முழுவதும் அர்ப்பணித்தவர்கள் பலர் உள்ளனர். அதில் சிலர் படும் கஷ்டங்கள் வெளியே தெரியும், சில நடிகர்களின் உழைப்பு தெரியாது.
இப்போது ஒரு விஷயம் நடந்துள்ளது, அதாவது படத்துக்காக தன்னை கன்னத்தில் அடித்து பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறி அடி வாங்கியிருக்கிறார் நடிகை சூசன்.
இந்த சம்பவம் தொட்ரா படத்தின் படப்பிடிப்பில் நடந்துள்ளது. இப்படத்தில் வில்லனாக நடிக்கும் எம்.எஸ்.குமார், சூசனை அடிக்கும் காட்சி இருக்கிறதாம்.
அவர் படப்பிடிப்பில் தயங்கியதால் அன்று இரவு இயக்குனர் மற்றும் குமாரை தன் அறைக்கு அழைத்து தன் கன்னத்தில் அடித்து பயிற்சி பெற்றுக் கொள்ளுங்கள், அப்போது தான் நாளை சரியாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்.
முதலில் தயங்கிய குமார் பின் நடிகையை ஓங்கி அடித்துள்ளார். இது சரி, நாளை படப்பிடிப்பில் சரியாக செய்யுங்கள் என அனுப்பி வைக்க, அடுத்த நாள் படப்பிடிப்பில் குமார் சூசனை ஓங்கி அடித்துள்ளார். அப்படி அவர் அடித்ததில் சூசனின் கன்னம் வீங்கியதுடன் கம்மல் அறுந்து விழுந்துவிட்டதாம்.