Home thatstamil one india tamil oneindia tamil பிரபல நடிகையின் வைரமுத்து குறித்து வைரல் பதிவு_ இதோ!

பிரபல நடிகையின் வைரமுத்து குறித்து வைரல் பதிவு_ இதோ!

0
518

வைரமுத்து குறித்து பாலியல் புகார்கள் எழுந்துள்ள நிலையில் அவருடன் தான் பழகிய அனுபவத்தை நடிகை கஸ்தூரி பகிர்ந்துள்ளார்.

நடிகை சின்மயி, வைரமுத்து தன்னை படுக்கைக்கு அழைத்தார் என கூறியது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன்னர் சந்தியாமேனன் என்ற பெண்ணும் வைரமுத்து குறித்து புகார் கூறினார்.

இந்நிலையில் இது குறித்து நடிகை கஸ்தூரி கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், வைரமுத்து அவர்களை நோக்கி சின்மயி எழுப்பியிருக்கும் குற்றச்சாட்டுக்களை பற்றி என் கருத்தை பலரும் கேட்கிறார்கள். வைரமுத்து அவர்களுடன் நான்.

அவர்களுடன் நான் பேச கிடைத்த சந்தர்ப்பங்கள் அனைத்திலும் தமிழையும் பெண்ணியத்தையும் மட்டுமே பகிர்ந்துகொண்டார். தவிர, அவரைப்பற்றி பலர் கூற கேள்விப்பட்டுள்ளேன். ஒரு எதிர்மறையான கருத்தும் இதுவரை என் காதுக்கு எட்டியதில்லை

சின்மயியும் எனக்கு நல்ல தோழியே ஆவார். நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் ஒருங்கே அமைந்த துணிவுள்ள பெண். அவர் முன்னெடுத்துவைக்கும் குற்றச்சாட்டுக்கள் மிகவும் வன்மையானவை. அவற்றின் உண்மைத்தன்மையை ஆராய்ந்தபிறகே சின்மயி பேச தொடங்கியிருப்பார் என்று எதிர்பார்க்கிறேன்.

இந்த சிக்கலான விஷயத்தில் சின்மயி எழுப்பிய குற்றச்சாட்டுக்களுக்கு வைரமுத்து அவர்கள் பதில் சொல்லும்வரை வெறும் பார்வையாளரான நமக்கு அவசரப்பட்டு எந்த தீர்ப்பும் சொல்லும் தகுதியோ
உரிமையோ இல்லை என்று கருதுகிறேன் என பதிவிட்டுள்ளார்.

Previous articleஆதாரத்துடன் வெளியிட்ட சின்மயி! பெண்கள் விடுதியில் வைரமுத்து செய்தது என்ன?
Next articleவிஜய் ரசிகர்களுக்கு சந்தோசமான‌ செய்தி இதோ! சர்கார் டீசர் தேதி வெளிவந்தது!