பிரபல நடிகைக்காக தமிழகத்தில் அரங்கேறிய கூத்து! நாடே அபினந்தன் வருகைக்காக காத்து கிடந்த நேரத்தில்!

0
435

கடந்த மாதம் 14 ஆம் தேதி காஷ்மீரின் புலவாமா மாவட்டத்தில், பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத அமைப்பு நடத்திய தாக்குதலில், இந்தியா துணை இராணுவ படையினர் 40 பேர் கொல்லப்பட்டனர்.

இதற்கு இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது 6 குண்டுகளை வீசி தரைமட்டமாக்கியது. இதில் 300 மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதற்கு பதிலடி கொடுக்க நொந்த பாகிஸ்தான் போர் விமானங்கள் இந்திய இராணுவ தளவாடங்கள் மீது தாக்குதல் நடத்த முற்பட்டது. அப்போது தயாராக இருந்த இந்திய போர் விமானங்கள் பதில் தாக்குதல் நடத்த, பாகிஸ்தான் போர் விமானங்கள் தலைதெறிக்க ஓடின.

இந்த சம்மபவத்தில் ஒரு பாகிஸ்தான் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்திய இராணுவ விமானி அபிநந்தன் பாகிஸ்தான் இராணுவத்தால் கைது செய்யப்பட்டார்.

நேற்று பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பதற்றத்தை அதிகரிப்பது யாருக்கும் பயன்தராது. அமைதியை விரும்பும் நல்லெண்ண அடிப்படையில் இந்திய விமானி அபினந்தன் நாளை விடுவிக்கிறேன் என்று அறிவித்தார். வேறு எந்த காரணத்தையும், விடுவிக்க எந்த நிபந்தனையும் வைக்காமல், அமைதியை விரும்பும் நல்லெண்ண அடிப்படையில் இந்திய விமானி அபினந்தன் விடுவிக்கிறேன்” என்று அறிவித்துள்ளார்.

இன்று மாலை அபினந்தன் இந்தியாவில் கால் பதித்தார். நாடே அவரின் வருகைக்காக எதிர்நோக்கி காத்துக்கொண்டிருந்த நேரத்தில், 90 ML படத்தில் நடித்த நடிகையான ஓவியாவை வரவேற்க ஒரு கூட்டம் திரண்டது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் சினிமா மீதான மோகம் குறித்து இராணுவ வீரர் ஒருவர் வீடியோ வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleசமையல் தெரியாதவர்கள் கூட இந்த ரகசியத்தை தெரிந்து கொண்டால் உங்கள் கணவருடன் பிரச்சனையே வராது!
Next articleசர்ச்சைக்கு மத்தியில் நடந்த இளம் நடிகையின் திருமணம்! கணவர் இவரா! தீயாய் பரவும் குழந்தையின் புகைப்படம்!