தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அல்லு அர்ஜூன். அவருக்கு நம் தமிழ் சினிமாவின் சூர்யா போல அங்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றன.
தமிழ்நாட்டிலும் அதிக எண்ணிக்கையிலான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவரின் படத்திற்கு இங்கும் நல்ல கலெக்ஷன் இருக்கிறது. அவர் அடுத்த ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பதாக அண்மையில் வந்த சுவாரசியமான தகவல்.
நேற்று மகள்கள் தினம் என்பதால் அல்லு தன் மகளின் புகைப்படத்தையும் ஃபர்ஸ்ட் லுக்கில் வந்த காட்சிகளை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை 9.57 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். மேலும் 5.20 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர்.




