தெலுங்கில் உருவாகும் ரொமாண்டிக் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தொகுப்பாளின் டிடி நடிக்கிறார்.
ஆகாஷ்பூரி ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் சார்மி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருக்கும் விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் டிடி.
இவர் விஜய் டிவியில் பணிக்குச் சேர்ந்து 20 ஆண்டுகளாகின்றன. இந்நிலையில் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்த வண்ணமே உள்ளது.
So happpy to finish the first schedule of #Romantic movie with my sweetheart Hero @ActorAkashPuri ? fun working… Thnks for the love n respect dear team n spl Thnks @purijagan sir ? for trustin me n @Charmmeofficial darling n director @anilpaduri garu ?? @PuriConnects #Goa pic.twitter.com/Uk3xpS2MyH
— DD Neelakandan (@DhivyaDharshini) March 24, 2019
தற்போது ரொமாண்டிக் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக டிடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.