கோலங்கள், திருமதி செல்வம், பந்தம், உள்ளிட்ட தொலைகாட்சி தொடர்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் பிர்லா போஸ். மேலும் ‘தனி ஒருவன்’, ‘துப்பறிவாளன்’ போன்ற ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற, சின்னத்திரை நடிகர் சங்க தேர்தலில் நடிகை நிரோஷாவின் அணியில் போட்டியிட்டு வெற்றி பெற்று தற்போது சங்கத்தின் செயல்குழு உறுப்பினர்களில் ஒருவராக உள்ளார்.
இந்நிலையில் தற்போது இவருடைய வீடு பறிபோகும் நிலைமையில் உள்ளது. இதனால் இன்று கமிஷ்னர் அலுவலகத்திற்கு வந்த அவர் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
இந்த புகார் மனுவில் கூறியுள்ளதாவது, நான் மதுரவாயல், பகுதியில் ஐந்து ஆண்டுகளாக வசித்து வருகிறேன். இந்த வீட்டை பாலாஜி என்பவரிடம் குத்தகைக்கு வங்கியிருந்தேன். ஒருநாள், வங்கியில் இருந்து வந்த அதிகாரிகள், வீடு ஜப்தியில் உள்ளது என கூறி, உடனே காலி செய்ய வேண்டும் என்று கூறினர். எனக்கு எதுவும் புரியவில்லை.
எனவே வீடு சம்பந்தமாக சிலர் தன்னை ஏமாற்றி உள்ளதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இதற்கு முன்பு கூட இதுகுறித்து புகார் கொடுத்துள்ளதாகவும் ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.