திண்டுக்கல் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் ரெயில்வே பாலத்தில் குமரேசன் என்ற 60 வயது முதியவர் ஒருவர் தினக்கூலி அடிப்படையில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அந்த பாலம் வழியாக பள்ளிக்கு சென்ற 6-ம் வகுப்பு மாணவி ஒருவரிடம் பேசி பழகி வந்துள்ளார்.
ஒருநாள் மாலை அந்த மாணவியை அங்குள்ள முட்புதருக்குள் அழைத்து சென்று சீரழித்துள்ளார். மேலும், நடந்த விபரத்தை யாரிடமும் சொன்னால் குடும்பத்துடன் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி இருக்கிறார்.
இதனால், அச்சமடைந்த மாணவி இதை யாரிடமும் சொல்லாமல் மறைத்துள்ளார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட குமரேசன் அந்த மாணவியை மிரட்டி பலமுறை ஆசைக்கு இணங்க வைத்துள்ளார்.
இதேபோல, நேற்று முன்தினம் மாலையும் மாணவியை கட்டாயப்படுத்தி குமரேசன் சீரழித்துள்ளார். இதனை அந்த வழியாக சென்ற பெண் ஒருவர் பார்த்து ஊர் பொதுமக்களிடம் தெரிவித்தார். இதையடுத்து, கிராமத்தினர் ஒன்று திரண்டு சென்று குமரேசனை ஊருக்குள் இழுத்து வந்தனர்.
பின்னர், அங்குள்ள ஒரு மின்கம்பத்தில் கட்டி வைத்து அவருக்கு தர்ம அடி கொடுத்தனர். இது குறித்து தாடிக்கொம்பு பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் பொலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குமரேசனை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். குமரேசன் தற்போது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார.




