பிக் பாஸ் வனிதா ஒரு பிரபல சீரியலில் வில்லியாக நடிக்க உள்ளதாக தகவல் ஒன்று இணயைத்தில் தீயாய் பரவி வருகின்றது.
பிரபல டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் அவர் நடிக்க இருக்கிறாராம். விரைவில் அவர் சம்மந்தப்பட்ட காட்சிகள் ஒளிபரப்பாகும் என தெரிகிறது.
பிரபல தொலைக்காட்சியில் கடந்த பல மாதங்களாக ஒளிபரப்பாகி வரும் நெடுந் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இத்தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.
இதில் வனிதாவும் சேர்ந்துவிட்டால், இனி கேட்கவா வேண்டும். இதுகுறித்து வனித இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு எதனையும் வெளியிடவில்லை.
இதேவேளை, வனிதா ஏற்கனவே சூசகமாக இதுபற்றி அறிவித்திருந்தார். எனவே விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: