பிக்பாஸ் நிகழ்ச்சியில் 6 வாரங்கள் கடந்து சென்று கொண்டிருக்கும் நிலையில் இது வரை 4 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். இந்த வார நாமினேஷனில், கவின், ரேஷ்மா, மதுமிதா, சாக்ஷி, அபிராமி இடம்பெற்றனர்.
இதைத்தொடர்ந்து கடந்த இரண்டு வாரங்களாக சாக்ஷி தான் வெளியேற போகிறார் என்று அனைவரும் எண்ணி வரும் நிலையில் போன வாரம் மீரா வெளியேறினார். இந்த வாரம் அப்போ சாக்ஷி தான் என எண்ணும் போது திடீரென இந்த இரண்டு நாட்களாக சாக்ஷி அதிகப்படியான வாக்குகளில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
இதனால் தற்போது ரேஷ்மாவிற்கும், அபிராமிக்கும் தான் கடுமையான போட்டி நிலவி வருகிறது. ஆனால், நேற்று கவின் மற்றும் லாஸ்லியா விஷயத்தில் சாக்க்ஷி கொஞ்சம் ஓவராக ரியாக்ட் பண்ணியதால் மீண்டும் சாக்க்ஷி ஆதரவு குறைந்து வருகிறது.
நேற்று வரை மூன்றாவது குறைந்து இருந்த சாக்க்ஷி தற்போது இறுதி இடத்தில் இருந்து வருகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. எனவே, இந்த வாரம் சாக்க்ஷி வெளியேற்றபடலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது.