பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி வரும் ஜூன் 23 ல் தொடங்கவுள்ளது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியை காண இதன் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
100 நாட்கள் ஒரு வீட்டில், 15 பிரபலங்கள், 60 கேமிராக்கள் என இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவருகிறார். வார இறுதிநாட்களில் அவர் வருவது கூடுதல் கவனம் பெறுகிறது.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் மகிளா காங்கிரஸ் பொதுசெயலரும் திருநங்கையுமான அப்சரா கலந்துகொள்வதாக தகவல் சுற்றி வந்தது. இந்நிலையில் அவர் கோபத்துடன் டிவீட் போட்டுள்ளார்.
பிக்பாஸ் சீசன் 3 ல் நான் பங்கேற்பதாக வந்த செய்தி தவறானது. முதல் சீசனுக்கே கால் வந்தது. நான் அதை தவிர்த்துவிட்டேன். ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்ற எனக்கு ஆர்வமில்லை, எந்தவொரு ரியாலிட்டி ஷோவிலும் கலந்துகொள்ள மாட்டேன் என கூறியுள்ளார்.
இதனையடுத்து முக்கிய தமிழ் பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட அப்சரா கோபத்துடன் பதிலளித்துள்ளார்.
Thank You @the_hindu for setting the record straight. I am not doing Bigg Boss Tamil or any other language. I request all news channels to stop flashing this news or calling for interviews. https://t.co/K5QvHuccMV
— Apsara R (@talktoapsara) June 2, 2019
The rumours that I’m participating in Bigg Boss Tamil are all false. I had been offered Season 1 which I declined. Not going to be doing Season 3. And not interested in participating in reality TV. Some credible news outlets are reporting this. Please avoid reporting false news.
— Apsara R (@talktoapsara) June 1, 2019




