பிக்பாஸ் வீட்டில் நடக்கும் தொடர் கொலைகளை கண்டுபிடிக்க கவின், மீரா, சாண்டி குழு அமைக்கப்பட்டுள்ளது.
கொலையாளி வனிதா தான் என பார்வையாளர்களுக்கு தெரிந்தாலும், வனிதா, முகேனை தவிர வேறு எந்த போட்டியாளர்களுக்கும் தெரியாததால் போலீஸ் குழு திணறுகிறது.
இதனால் டென்ஷனான சேரன் ஆவியாகவுள்ள சாக்ஷி, ஷெரின், மோகன் வெயிலில் மிகவும் கஷ்டப்படுவதால் இந்த டாஸ்க்கை இப்படியே விட்டுவிட வேண்டும் என பிக்பாஸிடம் கூறுகிறார்.
இதற்கிடையில் குறுக்கிடும் வனிதா, நாம் பிக்பாஸ் கேம் விளையாட்டிற்கு வந்திருக்கிறோம், குறிப்பிட்ட சம்பளம் பேசி வந்திருக்கோம். அதை மறக்காதீர்கள் என தெரியாமல் உளறி கொட்டி விடுகிறார்.
பிக்பாஸில் போட்டியாளர்களுக்கு நாள் கணக்கில் சம்பளம் தருகிறார்களா அல்லது குறிப்பிட்ட தொகையா என குழம்பி இருந்த ரசிகர்களுக்கு குறிப்பிட்ட தொகை தான் என கூறி தெளிவுப்படுத்திவிட்டார், வனிதா.
மேலும் போட்டியாளர்கள் தங்களுக்கு வழங்கப்படும் சம்பள தொடர்பான விஷயங்களை பேச கூடாது என்பது விதி ஆகும்.