பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளான மாணவன்! பிரபல பாடசாலை அதிபரின் மோசமான செயல்!

0

வவுனியாவில் மாணவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் பாடசாலை அதிபரை இன்று அதிகாலை கைது செய்து பொலிஸ் தடுப்பு காவலில் வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

செட்டிக்குளம் பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றின் அதிபர் நேற்று மாலை தரம் 9இல் கல்வி கற்கும் பாடசாலை மாணவனை பாலியல் ரீதியான துஸ்பிரயோகம் மேற்கொண்டதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவன் முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளார்.

இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த பாடசாலை அதிபரை பொலிஸார் கைது செய்து தடுப்பு காவலில் வைத்துள்ளனர்.

அதிபரால் பாலியல் ரீதியான தாக்கத்திற்குள்ளாகிய பாடசாலை மாணவன் மருத்துவ பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் அதிபரை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஅமிலத்தை போக்கும் செவ்வாழைப்பழத்தின் அற்புத மருத்துவ குணங்கள்!
Next articleதமிழ் இளைஞர், யுவதிகளுக்கு ஆபத்தா? கனடாவை எச்சரித்த சீனா!