Home Jaffna News பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்! கொழும்பில் பொலிஸார் குவிப்பு!

பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்! கொழும்பில் பொலிஸார் குவிப்பு!

0
407

தலைநகர் கொழும்பின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதனை அவதானிக்க முடிகின்றது.

நாளைய தினம் கூட்டு எதிர்க்கட்சியினால் மேற்கொள்ளப்பட உள்ள எதிர்ப்பு போராட்டம் காரணமாக கொழும்பின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, பொலிஸ் திணைக்களம் மேலதிக பொலிஸ் உத்தியோகத்தர்களை கொழும்பிற்கு அழைத்துள்ளது.

இவ்வாறு கடமைக்காக அழைக்கப்பட்ட பொலிஸார் கறுவாத்தோட்ட பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் நிலை கொண்டுள்ளனர்.

இதேவேளை, நாளைய போராட்டத்தை தடுத்து நிறுத்துமாறு மூன்று பொலிஸ் நிலையங்களினால் நீதிமன்றங்களில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை நீதிமன்றங்கள் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous article05.09.2018 இன்றைய ராசிப்பலன் ஆவணி 20, புதன்கிழமை !
Next articleநல்லூர் ஆலய வளாகத்தில் நடந்த மிகப் பெரும் சோகம்.