பாத வெடிப்பு தொல்லை நீக்கும் தேன் க்ரீம் !!
பாதவெடிப்பு அதிகளவு வலியை கொடுப்பதுடன், சூப்பரான உடலமைப்பினையும்; சுமாராக காண்பிப்பதோடு ஆரோக்கியமற்றதுமான ஒரு நிலயாகும். என்ன செய்வது? எல்லாம் செய்து விட்டேன் ஆனால்; திரும்ப வருகிறதே என்று ரொம்ப கவலையாக உள்ளதா? இதோ உங்கள் கவலை ஒரு நொடியில் பறநந்து போள்விடும். நீங்கள் முன்னெப்போதும் கேள்விப்பட்டிராத இந்த குறிப்புகளை கொஞ்சம் பயன்படுத்தி தான் பாருங்களேன். இதோ உங்களுக்கான எளிய குறிப்புகள். சற்று முயன்று தான் பார்ப்போமே.
தேன் க்ரீம் தயாரிக்க தேவையான பொருட்கள்
தேன் – 1 கப்
பால் – 1 கரண்டி
ஆரஞ்சு சாறு – 2 கரண்டி
பாத வெடிப்புகளுக்கான தேன் க்ரீம் தயாரிப்பதற்கு முதலில் தேனை லேசாக சூடேற்றி அதனுடன் பால் மற்றும் ஆரஞ்சு சாறை கலந்து, அதன் பதம் மிகவும் கடினமாக இருக்குமாயின் சேர்க்கப்படும் ஆரஞ்சு சாறின் அளவினை அதிகரிகரிக்கவும். பின்னர் இதனை தினமும் இரவில் பாதங்களில் பூசிக் வரும் போது, வெடிப்பு மறைந்து மிகவும் மென்மையானதும் மிருதுவானதுமான பாதம் கிடைக்கும்.
பயிற்றம் மாவு, வேப்பிலை கலவை
எலுமிச்சை சாறு
பயித்தம் பருப்பு
மாவு
வேப்பிலை மஞ்சள்
பயிற்றம் மாவு – வேப்பிலை கலவை : வேப்பிலையை நன்கு அரைத்து அதனுடன் பயித்தப் பருப்பு தூள், மஞ்சள் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியனவற்றைக் கலந்து தினமும் பாதங்களில் தடவி, 15 நிமிடம் கழித்து கழுவி வருதல் வேண்டும். இவ்வாறு தொடர்சியாக செய்து வரும் போது சுருக்கங்களற்ற, வெடிப்பு நீங்கிய அழகிய பாதம் கிடைப்பதுடன் பளபளப்பாகவும் காணப்படும்.
ஆப்பிள் சைடர் வினிகர் : கால் பக்கெட் வெதுவெதுப்பான தண்ணீPரில் 2 கோப்பை ஆப்பிள் சைடர் வினிகரை கலந்து, அதில் கால்களை அமிழுத்தி வரும் போது, அதிலுள்ள அமிலத்தன்மையானது பாதத்திலுள்ள கடினத்தன்மையை நீக்கி பாதத்தை மென்மையாக்குவதுடன், வெடிப்பும் இருந்த தடயமே தெரியாமல் வேகமாக மறைந்துவிடும்.
By: Tamilpiththan