Home thatstamil one india tamil oneindia tamil பள்ளி வளாகத்தில் கொடூரமான நிலையில் 6 வயது சிறுமி… உயிருக்கு போராடும் அவலம்!

பள்ளி வளாகத்தில் கொடூரமான நிலையில் 6 வயது சிறுமி… உயிருக்கு போராடும் அவலம்!

0
551

பள்ளி வளாகத்தில் 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம், ஆடைகளின்றி பலத்த காயங்களுடன் சுயநினைவின்றி கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் ஒடிசா மாநிலம், கட்டாக் மாவட்டத்தில் ஜகன்னாத்பூர் கிராமத்தில் கடந்த சனிக்கிழமை மாலை 6 வயது சிறுமி ஒருவர் தின்பண்டம் வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் மின் தடை ஏற்பட்டது.

ஒரு மணி நேரம் ஆகியும் கடைக்கு சென்ற சிறுமி வீடு திரும்பாததால் அச்சமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிறுமியை அந்த பகுதி முழுவதும் தேடி அலைந்துள்ளனர்.

இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் சிறுமியை ஏமாற்றி பள்ளி வளாகத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அந்த நபர், சிறுமியை தாக்கி கொல்ல முயன்றுள்ளார். சிறுமி சுயநினைவிழந்த நிலையில் இறந்துவிட்டதாக நினைத்து அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார்..

இந்நிலையில், அவரது குடும்பத்தினர் பல இடங்களில் சிறுமிய தேடியும் கிடைக்காததால், கடைசியாக பள்ளி வளாகத்திற்குள் ஆடைகளின்றி, பலத்த காயங்களுடன் சுயநினைவில்லாமல் சிறுமி கிடப்பதை அவதானித்துள்ளனர். தலை, முகத்தில் காயங்களோடு சிறுமி கிடந்ததை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், சிறுமியின் நிலைமை கவலைக்கிடமாகவே உள்ளதாகவும், தலை, முகம், கழுத்தில் காயங்கள் அதிகமாக உள்ளதாக மருத்துவமனையில் தெரிவித்துள்ளனர்.

மேலும், சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக அந்த ஊரை சேர்ந்த நபரை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous articleமூல நோயை முற்றிலும் குணப்படுத்தும் ஒரு இலை எது தெரியுமா? அவசியம் பகிருங்கள்!
Next articleஇளம்பெண் செய்யும் முகம்சுழிக்கும் காரியம்… ஒருவேளை காதல் தோல்வியா இருக்குமோ?