பள்ளிக்கு செல்ல மறுத்து பெற்றோரிடம் அழுத மாணவி… வசமாக சிக்கிய 12 ஆசிரியர்கள்!

0
497

தமிழகத்தில் பள்ளி மாணவியிடம் ஆபாசமாக பேசிய 12 ஆசிரியர்கள் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த குன்றத்தூரை சேர்ந்த மாணவி ஒருவர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

அவருக்கு அரசு சார்பில் வழங்கப்படும் இலவச மடிக்கணினி வழங்கப்படவில்லை.

பள்ளியில் அவரது பெற்றோர் கேட்டும் வழங்கப்படாததால் கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். அதன்பிறகு அந்த மாணவிக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது.

இந்த நிலையில் கல்வி அதிகாரிகளிடம் புகார் செய்ததால், சம்பந்தப்பட்ட மாணவியை ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் தூண்டுதலின்பேரில் மாணவர்கள் சிலர் ஆபாசமாக பேசி மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் அந்த மாணவி, பள்ளிக்கு செல்ல மறுத்து தனது பெற்றோரிடம் நடந்ததை சொல்லி குமுறியுள்ளார்.

இதையடுத்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொலிசாரிடம் மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர்.

அதன்பேரில் குறித்த அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 12 ஆசிரியர்கள், 10 மாணவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Previous articleஷெரினை காப்பாற்ற சற்றும் யோசிக்காமல் இலங்கை தர்ஷன் செய்த காரியம்! கடும் அதிர்ச்சியில் பார்வையாளர்கள் !
Next articleசாமியார் நித்தியானந்தா மூளைசலவை செய்தார்.. ஆசிரமத்தில் நடக்கும் அக்கிரமம்.. கனடா பெண் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ !