பல அதிரடிகள் இன்னும் காத்திருப்பதாக மிரட்டுகிறார் மைத்திரி! பரபரப்பாகும் இலங்கை!

0
326

எந்தவொரு அழுத்தத்திற்கும் அடிபணிந்து பின்வாங்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

என்னால் கொண்டு வரப்பட்ட தீர்வு தீர்மானங்களை எந்தக் காரணத்திற்காகவும் இடையில் நிறுத்துவதில்லை என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை ஒரேயொரு துருப்புச் சீட்டு மாத்திரமே பயன்படுத்தப்பட்டுள்ளது. என்னிடம் பல துருப்புச் சீட்டுக்கள் உள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

எதிர்வரும் 14ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு ஐக்கிய தேசிய கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு ஆதரவு வழங்கவில்லை என்றால் அரசியலமைப்பு திருத்தச்சட்டத்திற்கு இணங்க வைக்க கூடிய துருப்புச் சீட்டு தன்னிடம் உள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்று இரவு இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிறைவேற்று குழு கூட்டத்தில் வைத்து ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

Previous articleகர்ப்பமாக இருக்கும் போது பப்பாளி சாப்பிடலாமா? கூடாதா?
Next articleகளத்திற்கு விரையும் முப்படையினர்! முல்லைத்தீவில் தீவிரமடைந்துள்ள அபாய நிலை!