பலமிருந்தும் தோல்வி! அனைத்தையும் கைவிடத் தயாராகும் ரணில்!

0
386

மஹிந்த ராஜபக்சவுக்கு நாடாளுமன்றத்தில் பிரதமர் பதவி வழங்குவதற்கு சபாநாயகர் கொண்டு வந்துள்ள தீர்மானித்திற்கு சில தரப்பினர் தவறான அர்த்தத்தை எடுத்து கொண்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

சநாயகரின் இந்த தீர்மானத்திற்கமைய நாட்டின் பிரதமர் மஹிந்த ராஜபக்ச என ஏற்றுகொள்ளப்பட்டது உறுதியாகியுள்ளதாக பல தரப்புகள் சுட்டிக்காட்டியுள்ளது.

அவ்வாறான சூழ்நிலையில் ரணில் விக்ரமசிங்க தொடர்ந்து அலரி மாளிகையில் தங்கிருப்பது எப்படியான கலாச்சாரம் என சிலர் குறிப்பிடுகின்றது.

எனினும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை வெளிப்படுத்துவதற்கு ஐக்கிய தேசிய கட்சி ஆயத்தம் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை தொடர்பில் தீர்மானம் கிடைக்கும் வரை ரணில் விக்ரமசிங்க அலரி மாளிகையில் தங்கிருப்பார் என நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார்.

பெரும்பான்மையை வெளிப்படுத்த முடியவில்லை என்றால் அனைத்தையும் கைவிடுவதற்கு தயார் என அவர் தெரிவித்துள்ளார்.

Previous articleநம்ம ஆரோக்கியத்துக்கான பத்து சிறந்த கை மருத்துவ‌ விஷயங்கள்!
Next articleஅலரி மாளிகையை விட்டு வெளியேறும் ரணில்! கோத்தபாய கொடுத்த உறுதிமொழி!