பலத்த மழை காரணமாக திருகோணமலையில் வேறு பல‌ பாதிப்பு!

0

திருகோணமலை மாவட்டத்தில் பலத்த மழை காரணமாக பல்வேறு பாதிப்புக்கள் இடம்பெற்றுள்ளதாக திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் குகதாஸ் சுகுனதாஸ் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இதனை கட்டுப்படுத்த தொடர்ந்தும் களத்தில் இறங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் இன்றைய தினம் அவர் மேலும் கூறுகையில்,

மொத்தமாக திருகோணமலையில் உள்ள 11 பிரதேச செயலக பிரிவை உள்ளடக்கிய சுமார் 1380 குடும்பங்களை சேர்ந்த 4709 உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 17 வீடுகள் சேதமடைந்துள்ளன.

வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் 23 குடும்பங்களை சேர்ந்த 75 உறுப்பினர்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். உறவினர்களின் வீட்டில் 130 குடும்பங்களை சேர்ந்த 465 உறுப்பினர்கள் தங்கியுள்ளனர்.

முகாம்களில் தங்கியுள்ளோர்களுக்கான சமைத்த உணவுகள் மற்றும் இதர உதவிகள் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவியுடன் செய்யப்பட்டு வருகின்றன.

இதற்காக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட குழுக்களின் மூலமாக கடமைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், வீடுகளில் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள மேலதிக நீரை வெளியேற்ற ஜே.சி.பி போன்ற இயந்திரங்களை பிரதேச மட்டத்தில் பயன்படுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகிளிநொச்சியில் மாணவர்களுக்கு உதவும் படையினர்!
Next articleToday Rasi Palan இன்றைய ராசிப்பலன் – 07.12.2019 சனிக்கிழமை !