பதுளை – வெலிமடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வயிற்று வலி எனக் கூறி தனது பாட்டியுடன் வைத்தியசாலைக்கு சென்ற சிறுமி ஒருவர் கர்ப்பமாக இருப்பது மருத்துவப் பரிசோதனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
15 வயதும் 7 மாதங்களுமான இந்த சிறுமி தனது கிராமத்தில் உள்ள பாடசாலையில் 11ஆம் தரத்தில் படித்து வருகிறார்.
மேலும், குறித்த சிறுமியை கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சிறுமியின் தாய் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு வீட்டை விட்டு சென்றுள்ளதுடன், தந்தை கொழும்பில் கட்டட நிர்மாண தொழிலாளியாக தொழில் புரிந்து வருகிறார்.
இந்த நிலையில், மாணவி தனது பாட்டியின் பாதுகாப்பில் இருந்து வந்துள்ளதாக வெலிமடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை நேற்று பதுளை பகுதியில் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக கூறி சிகிச்சை பெற வைத்தியசாலைக்குச் சென்ற 15 வயதான மாணவி குழந்தை ஒன்றை பெற்றெடுத்த சம்பவம் இடம்பெற்றிருந்தது.
இந்த நிலையில் இன்று வயிற்று வலி எனக் கூறி தனது பாட்டியுடன் வைத்தியசாலைக்கு சென்ற சிறுமி கர்ப்பமாக இருக்கும் விடயம் தெரியவந்துள்ளது.
இலங்கையில் இவ்வாறு சிறுமிகள் கர்ப்பமாகுவது அதிகரித்து வரும் நிலையில், பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் அவதானத்துடன் இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.




