பகலில் அம்மா…. இரவில் படுக்கை அறை பொம்மை: பத்திரிகையாளர் சந்திப்பில் கதறிய நடிகைகள்!

0

தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களால் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாவதாக தெலுங்கு நடிகைகள் பத்திரிகையாளர்களிடம் பேட்டி அளிக்கும்போது கதறி அழுதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பத்திரிகையாளர் சந்திப்பின்போது நடிகைகள் கூறியதாவது,

தெலுங்கு பட உலகில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, சினிமா வாய்ப்பு கேட்டால் படுக்கைக்கு அழைக்கிறார்கள், அதற்கு உடன்படும் பெண்களை ஆசைக்கு பயன்படுத்திவிட்டு ஏமாற்றி விடுகிறார்கள்.

பகலில் பெண்களை அம்மா என்று அழைக்கிறார்கள், இரவில் படுக்கை அறை பொம்மையாக்கி விடுகிறார்கள்.

80 வயது முதியவருக்கும் பெண் தேவைப்படுகிறது, வயதான பெண்களையும் விடுவது இல்லை.

செக்ஸ் தொல்லை கொடுக்கும் இன்னும் பலரது பெயர்களை வெளியிடுவோம். ஆந்திர, தெலுங்கானா முதல்வர்கள் இந்த பிரச்சினையில் தலையிட வேண்டும் என கூறியுள்ளனர்.

டைரக்டர்கள் சேகர் கம்முலு, கோனா வெங்கட், கொரடாலா சிவா, நடிகர் ராணாவின் தம்பி அபிராம், நகைச்சுவை நடிகர் விவா ஹர்ஷா, பாடகர் ஸ்ரீராம் சந்திரா, தயாரிப்பாளர் வெங்கட் அப்பாராவ் ஆகியோர் பெயர்களை ஸ்ரீலீக்ஸ் பக்கத்தில் நடிகை ஸ்ரீரெட்டி வெளியிட்டு இருக்கிறார்.

திரையுலக பிரபலங்கள் ஐதராபாத்தில் உள்ள ஸ்டுடியோக்களை சிவப்பு விளக்கு பகுதியாக பயன்படுத்தி அங்கு பெண்களிடம் செக்ஸ் வைத்துக்கொள்வதாகவும் குற்றம்சாட்டி உள்ளார், இவருக்கு ஆதரவாக மகளிர் அமைப்பும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

Previous articleயாழ்.வடமராட்சி மீனவருக்கு அடித்த அதிஷ்டம்!
Next articleகனடாவில் மற்றுமொரு யாழ். இளைஞன் கோரமாக கொலை!