ட்விட்டரில் எந்த ட்ரெண்டிங்காக இருந்தாலும் அதற்கு ஒரு தரப்பு எதிர்ப்பு இருக்கும். ஆனால் நேசமணி (வடிவேலு) என்று வந்தவுடன் எல்லாரும் கலாய்த்து, சிரித்து சந்தோஷமாக இருக்கிறார்கள். சென்னை ட்ரெண்டிங், இந்தியா ட்ரெண்டிங், உலக ட்ரெண்டிங் வரை சென்றார் நேசமணி. மீம் கிரியேட்டர்கள் மட்டுமில்லை, அரசியல் வாதிகள், சினிமா பிரபலங்கள், ஊடகவியலாளர் என பலரும் நேசமணி ஜாலியில் பங்குபெற்றது வடிவேலுவின் பலத்தை காட்டுகிறது.
சில காமெடிகளை பார்த்தாலும் சிரிப்பு வராது. சிலதை பார்த்தால் தான் சிரிப்பு வரும். வடிவேலு காமெடிகளை கேட்டாலே சிரிப்பு வரும். அதே போல் சத்தத்தை மியூட் செய்து விட்டு வடிவேலு ரியாக்ஷன்களை பார்த்தாலும் சிரிப்பு வரும். டயலாக் டெலிவரி, உடல் பாவனைகள் இரண்டிலும் சிக்சர் அடிப்பார் வடிவேலு.
இந்நிலையில் நேசமணியை ஏன் தாக்கினேன் என்று வடிவேலுவை சுத்தியால் தாக்கிய கிருஷ்ணமூர்த்தி கேரக்டரான ரமேஷ் கண்ணா உண்மை கூறிய காமெடி உருவான கதையை சுவாரஷியமாக நம்முடன் பகிர்ந்துள்ளார்…




