ஐபிஎல் போட்டிகளில் தமிழில் வர்ணணையாளராக இருக்கும் நடிகர் ஆர்.ஜே பாலாஜியை கிண்டலடித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் இலங்கை முன்னாள் வீரர் அர்னால்டு.
2019-ஆம் ஆண்டின் ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Dei @RJ_Balaji nee yennada overa pesurai ??
— Russel Arnold (@RusselArnold69) March 26, 2019
இந்த போட்டிகளை தமிழில் ஆர்ஜே பாலாஜி வர்ணணையாளராக பணிபுரிந்து வருகிறார். இதுகுறித்து இலங்கை அணியை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ரசல் அர்னால்டு டுவிட்டரில், டேய் ஆர்ஜே பாலாஜி, நீ என்னடா ஓவரா பேசுற? என்று பதிவிட்டார்.
அதற்கு ஆர்.ஜே பாலாஜி, பார்ரா, அத யாரு சொல்றானு? அய்யா அர்னால்டு, முடிஞ்சா டுவிட்டரில் பேசுறத விட்டுட்டு, முடிஞ்சா இங்க வந்து பேசுங்க என்று பதிலளித்தார்.
பின்னர் அதற்கு, ஏன் ஆர்ஜே இருக்க கூடாதா?, இந்த அழகான மக்கள் மற்றும் மொழி மேல எனக்கு எப்போதுமே அன்பு இருக்கு.
தமிழ் டுவிட்டர் மக்கள் கேட்டதுனால தான் என்ட்ரி தரேன் என அர்னால்டு சொல்ல, அதற்கு ஆர்ஜே பாலாஜி, சீன் போட்டது போதும். தமிழ் வர்ணணைக்கு உங்களை வரவேற்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
Paara, adha yaaru solra nu.!!! ?Ayya Arnold, mudincha Twitter la pesuradha vitutu, Inga vandhu pesunga ! ?? https://t.co/cCYlEI6dvB
— LKG (@RJ_Balaji) March 26, 2019