உங்களுடைய வீட்டில் தெய்வங்களின் விக்ரஹங்கள் அல்லது படங்கள் பழுதடைந்து அல்லது உடைந்து அல்லது தேய்ந்து போய் இருந்தால் என்ன செய்வது? அவற்றை எறிவது சரியா? என்ன செய்யலாம் ! அவற்றை எப்படி அப்புறப்படுத்துவது என்ற இந்த பிரச்சினை அனைவருக்கு இருக்கும் ஒன்று தான். பலர் செய்யும் சுலபமான வேலை என்னவென்றால் அவற்றை ஏதோ ஒரு கோவிலிலோ அல்லது சாலை ஓரங்களிலோ அல்லது மரங்களின் அடியிலோ போட்டுவிட்டு போய்விடுகின்றனர்.ஆனால் தெரிந்தோ தெரியாமலோ அவர்கள் செய்யும் இந்த செயல் மஹா பாவம் ஆகிறது இறைவனின் முன்னிலையில் மன்னிக்கமுடியாத குற்றமும் ஆகும். அப்போ என்ன தான் செய்வது என்ன வழியிருக்கிறது ஆம்..
வீட்டில் இருக்கும் வரை பூஜைகள் செய்து தெய்வமாக வழிபாடு செய்யப்பட்ட அவற்றை இப்படி அவசியம் இல்லாத போது உதாசீனப்படுத்தக்கூடாது.இப்படி சாலையோரத்தில் குப்பை மேடுகளில் உள்ள நமது மதத்தின் தெய்வங்களின் படங்களை பார்த்து மற்றைய மதத்தவர்கள் தரக்குறைவாக எண்ண நாமே வழியமைத்து கொடுப்பது சரியா நம் மதத்தை குறித்து பலவாறாக கிண்டலும் கேலியும் செய்ய நாமே காரணமாகி விடக்கூடாது. அவர்களுக்கு அந்த சந்தர்பத்தை நாம் அளிக்கக்கூடாது.
மற்ற மதத்தவரின் தெய்வ படங்களை இது போல் எங்காவது பார்த்திருக்கிறீர்களா யோசித்து பாருங்கள். நமக்கு தேவையிலை என்று ஆகிவிட்ட படங்கள் விக்கிரகங்களை தயவு செய்து அக்னி பகவானுக்கு ஆஹுதி கொடுப்பது (சமர்பிப்பது) சிறந்த செயல். எப்படி முடியும்? ஸ்வாமி படங்களை அக்னியில் போடுவது சரிதானா? என்ன இவர் இப்படி கூறுகிறாரே என்று யோசிக்கிறீர்களா. ஆனால் அக்னி பகவான் ஸர்வ பக்ஷகன். எல்லா சமயத்திலும் புனிதமானவர். அதனால் பவித்ராக்னியில் ஸ்வாமி படங்களை சமர்பிப்பது தவறில்லை.
அல்லது நீரில் கரைய கூடியவற்றை ஓட்டமுள்ள நதியிலோ, ஏரியிலோ நிமர்ஜனம் (கரைத்தல்) செய்யலாம். எதுவாக இருந்தாலும் (அக்னி பகவானுக்கு சமர்பித்தாலும் அல்லது நதியில் போடுவதாக இருந்தாலும்) நீங்கள் செய்யவேண்டிய கட்டாய கடமை ஒன்று உள்ளது ஆம் முதலின் அந்த விக்ரஹங்களை அல்லது படங்களை நமஸ்கரித்து பூஜித்து “கச்ச கச்ச ஸுரஸ்ரேஷ்ட ஸ்வஸ்தான பரமேஸ்வர” என்று கூறி ஸ்தோத்தரித்து விடவேண்டும். இதுவும் நிமர்ஜனம் (கரைப்பது) அல்லது இல்லாமல் செய்வதாகும் என்பதை தெரிந்து கொள்ளவும். இது பலருக்கு தெரிய வாய்ப்பில்லை என்பதால் கண்டிப்பாக தெரியபடுத்துங்கள். இதுகூட நம்முடைய கடமை. இறை தர்மத்தை காப்பது நம் சிறந்த பண்பாகும். அவன் ஆசியும் அருளும் கிட்டும்.
By: Tamilpiththan