நிஜ ஜோடிகளாகவே மாறப்போகிறார்களா! திருமணம் சீரியல் ஜோடிகள்! உண்மையை கூறிய இயக்குனர்!

0
494

தற்போது உள்ள சினிமா பிரபலங்களில் சினிமாவை விட சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.. அதிலும் கடந்த சில மாதமாக மற்ற தொலைக்காட்சி சீரியல்களை விட கலர்ஸ் தொலைக்காட்சி சீரியல்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கும் சீரியல் தான் திருமணம் சீரியல்.

இதில், சீரியலில் டப்ஸ்மாஷ் மூலம் பிரபலமான சித்தூவும், அவருக்கு ஜோடியாக ஸ்ரேயாவும் நடித்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் உள்ள ஜோடி பொருத்தத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் ஜோடி நிஜத்திலும் ஜோடியாக வேண்டும் என்று ஆசைப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் இவர்கள் இருவரின் கெமிஸ்ட்ரி குறித்து பேசியுள்ளார் இந்த சீரியலின் இயக்குனர் அழகர்.




இயக்குனரின் பதில்

இதுகுறித்து பேசியுள்ள அவர், ரெண்டுபேருமே ஒரு சீன் எப்படி வரணும்னு நினைக்கிறோமோ, அதைச் சரியா பண்ணிக் கொடுக்கிறாங்க. சொல்லப்போனா, நாம எதிர்பார்க்கிறதைவிட நல்லா பண்றாங்க. இந்த ஜோடி ரியல் நாம மாதிரி இருப்பதா ரசிகர்கள் சொல்றாங்க. அப்படி ஒரு பேச்சு வருதுன்னாலே நாங்க ஜெயிச்சிட்டோம்னுதான் அர்த்தம் சீரியலைப் பொறுத்தவரை, போட்டிகள் இருக்கும். ரேட்டிங் வாங்க பார்வையாளர்கள் முக்கியம்.


மானிட்டர் முன்னாடி உட்காரும்போது, நான்தான் அந்த சீரியலுக்கு முதல் ரசிகனாக இருப்பேன். ‘ஒரு ரசிகன் சீரியலை இயக்கினா எப்படி இருக்கும்’னுதான் யோசிப்பேன். இதுக்கு முன்னாடி சீரியலை இயக்கினா எப்படி சீரியலை இயக்கிய ஜவஹர், என் நண்பர்தான். அவருக்குப் பட வேலைகள் இருந்ததாலதான் நான் இதை இயக்குகிறேன் என்று கூறியுள்ளார்.

Previous articleமுல்லைத்தீவில் குடும்ப பெண்ணிற்கு நேர்ந்த கதி!
Next articleதமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மோடி கொடுத்த வாக்கு! வெளியானது தகவல்!