நாய் உணவை சாப்பிட்டதால் சக நாய் மன்னிப்பு கேட்கும் சம்பவம்! மனதை உருக வைக்கும் காணொளி!

0
384

சக நாயின் உணவையும் சேர்த்து தின்றுவிட்டதால், பசியோடு இருக்கும் அந்த நாயிடம் சென்று மன்னிப்பு கேட்கும் நாயின் வீடியோ, பார்ப்பவர்களின் மனதை உருக்குவதாக உள்ளது.

ஆறறிவு படைத்த மக்களே, மற்றவர்களுடன் ஏதேனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் சண்டையிட்டு கொள்கிறோம். பேசாமல், பார்க்காமல் கூட இருக்கிறோம். ஆனால், மன்னிப்பு கேட்க மட்டும் சிலநேரம் மறந்தும், மறுத்தும் விடுகிறோம்.

ஐந்தறிவு கொண்ட இந்த நாயின் செயலை பாருங்கள். வால்டர் மற்றும் கிகோ சகோதர நாய்கள். இருவருக்கும் நாயின் உரிமையாளர் உணவு வழங்கியிருந்தார். வால்டர் நாய், கிகோவின் உணவையும் சேர்த்து தின்றுவிட்டது.

கிகோ நாய், கோபம் கொள்ளாது சோர்வாக படுத்திருந்தது. இதை அறிந்துகொண்ட நாய்களின் உரிமையாளர், வால்டர் நாயிடம் கடிந்துகொண்டார். வால்டர் நாய் தலைகவிழ்த்து குற்றத்தை ஒப்புக்கொண்டது. போ… உன் சகோதரன் பசியாக இருக்கிறான். அவனிடம் சென்று மன்னிப்பு கேள் என்று உரிமையாளர் கட்டளையிட்டதும், கிகோவிற்கு அருகே சென்ற வால்டர். அதை பின்னாலிருந்து கட்டிப்பிடித்து அதன் தலையின் மீது தன் முகத்தை வைத்து மன்னிப்பு கேட்டது.

Previous articleபெரிய ஆப்பிளின் எடையில் சின்னஞ்சிறிய குழந்தை! கின்னஸ் சாதனையிலும் இடம்பெற்ற அதிசயம்! தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா!
Next articleநேசமணியை இதனால் தான் தாக்கினேன்! உண்மையை கூறிய கிருஷ்ணமூர்த்தி ரமேஷ் கண்ணாவின் பேட்டி!