நான் என்ன மோசமான நடிகரா? புலம்பிய 80ஸ் நடிகர். ஆறுதல் சொல்லும் ரசிகர்கள், எனக்கு அழைப்பு வரவில்லை!

0

நான் என்ன மோசமான நடிகரா? புலம்பிய 80ஸ் நடிகர். ஆறுதல் சொல்லும் ரசிகர்கள், எனக்கு அழைப்பு வரவில்லை!

தென்னிந்திய சினிமா உலகைச் சேர்ந்த நடிகர், நடிகையர்கள் எல்லாம் வருடம் வருடம் ஒரு ரீயூனியன் நிகழ்ச்சியை நடத்துவார்கள். மேலும், இந்த வருடத்திற்கான ரீயூனியன் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் இந்த சிரஞ்சீவியின் வீட்டில் நிகழ்ந்து உள்ளது. இதில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் உள்ள நடிகர்கள் இந்த விழாவில் பங்கு பெற்றனர்.

அதென்ன! ரீயூனியன் நிகழ்ச்சி என்று பார்த்தால் 80 கால கட்டங்களில் சினிமா துறையில் கொடிகட்டி பறந்த நடிகர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து கொண்டாடும் விழா ஆகும். சினிமா உலகம் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்து வந்ததற்கு காரணம் 80 களில் தோன்றிய நடிகர், நடிகைகள் தான். அப்போது தான் சினிமா உலகின் மிகப் பெரிய மெகா ஸ்டார்களெல்லாம் உருவெடுத்தார்கள்.

மேலும், அது தென்னிந்திய சினிமாவின் பொற்காலம் என்றும் சொல்லலாம். தற்போது உள்ள சினிமா உலகில் பல விஷயங்கள் மாறி இருந்தாலும் 80 காலகட்டங்களில் இருந்த நடிகர்-நடிகைகள் போல இருக்க மாட்டார்கள். இவர்கள் அப்போது நடித்திருந்தாலும் தற்போது வரை சின்னத்திரையில் நடித்துக் கொண்டும், இயக்குனர், தயாரிப்பாளர் என பல துறைகளில் பணி புரிந்து வருகிறார்கள்.

இந்த நிகழ்ச்சியில் சிரஞ்சீவி, மோகன்லால், நாகார்ஜுனா, பாக்யராஜ், வெங்கடேஷ், ஜாக்கி ஷெஃராப், ரமேஷ் அரவிந்த், ரகுமான்,பிரபு,பாக்கியராஜ், சரத்குமார், ராதிகா, குஷ்பு, ஜெயராம், நாகர்ஜுனா உள்ளிட்ட பல நடிகர்கள் கலந்து கொண்டனர். மேலும், அவர்கள் இந்த வருடம் கருப்பு மற்றும் தங்க நிறத்திலான ஆடைகளை அணிந்து உள்ளார்கள்.

இதைத் தொடர்ந்து விழாவில் நடிகர், நடிகைகள் அனைவரும் பல்வேறு விளையாட்டுகளை விளையாடி சந்தோஷமாக கொண்டாடி உள்ளார்கள். மேலும்,இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் ராம் சரண் கலந்து கொண்டார். மேலும், விழாவின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கடந்த வருடம் போல இந்த வருடமும் ரஜினியும் கமலும் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை. மேலும், பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கேலி, கிண்டல், நகைச்சுவை, ஆரவாரம் என ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் இருந்தது. மேலும் ,இந்த விழாவின் ஏற்பாடுகளை மெகா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி அவர்கள் சிறப்பாக செய்து இருந்தார்.

அதோடு இந்த விழா வருடம் வருடம் சிறப்பாக நடைபெறும் திரு விழா ஆகும். இந்த விழாவின் மூலம் பழைய நினைவுகளை மீண்டும் கொண்டு வரவும், புது நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ளவும் உள்ளது. அதுமட்டுமில்லாமல் பழைய நண்பர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்தால் கலாட்டாவுக்கு பஞ்சமா என்ன!!! ஆனால், இந்த நிகழ்ச்சியில் நடிகர் பிரதாப் போத்தன் கலந்து கொள்ளவில்லை.

இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், எழுத்தாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இவர் இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும், மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இவருடைய “என் இனிய பொன் நிலாவே”, “நெஞ்சில் ஒரு முள்” பாடல்கள் எல்லாம் இன்று உள்ள இளைஞர்கள் கூட ரசிக்கும் அளவிற்கு உள்ளது. மேலும், இவர் நாளைய இயக்குனர் என்ற ஒரு நிகழ்ச்சியில் நடுவராக ஜட்ஜாக உள்ளார்.

மேலும், இவர் பேஸ்புக்கில் இந்த நிகழ்ச்சி குறித்து கருத்து ஒன்று பதிவிட்டுள்ளார். அது என்னவென்றால் “நான் ஒரு கெட்ட நடிகர் என்பதால் தான் என்னை அவர்கள் அழைக்கவில்லை” என்று மன வேதனையுடன் கூறியிருந்தார். மேலும், இந்த பதிவை பார்த்த லட்சக்கணக்கான பாலோவர்ஸ் அவருக்கு ஆறுதல் கூறும் வகையில் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகுவியும் லைக்ஸ், சொந்த ஊரில் சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ் கட்டிய சூப்பரான வீடு!
Next articleவிஸ்வாசம் அஜித் மகளுக்கு ரசிகர்கள் அட்வைஸ், நீ கொழந்தமா, இப்படிலா போஸ் வேண்டாம்!