நான்கு ஆண்டுகளாக தன்னை காதலித்து ஏழ்மையை காரணம் காட்டி கைவிட்ட காதலன
தனது ஏழ்மை நிலையை காரணம் காட்டி 4 ஆண்டுகளாக காதலித்த தன்னை புறக்கணித்ததால் மனமுடைந்த மதுரையைச் சேர்ந்த இளம் பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருவாதவூரைச் சேர்ந்தவர் சிந்துஜா.
இவர் மதுரை அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் இவருக்கும் சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கலை சேர்ந்த ராம்குமாருக்கும் இடையே காதல் மலர்ந்தது.
இவரும் கல்லூரி மாணவராவார். கடந்த 4 ஆண்டுகளாக இவர்கள் காதலித்து வந்தனர். பேஸ்புக், வ,ட்ஸ் ஆப் மூலம் காதலை வளர்த்த இவர்கள் மியூசிக்கலி ஆப்பையும் விட்டு வைக்கவில்லை.பெண்ணை பிடித்து போயிற்று.இவர்களது காதல் விவகாரம் ராம்குமாரின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதையடுத்து சிந்துஜாவை ராம்குமாரின் வீட்டுக்கு அழைத்து சென்று அவரது தாயாருக்கு அறிமுகம் செய்து வைத்ததில் அவருக்கு அந்த பெண்ணை பிடித்து விட்டது.
இதையடுத்து வேறு ஜாதியாக இருந்தாலும் ராம்குமாரின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு சொல்லவில்லை. சிந்துஜாவின் வீட்டுக்கு முறைப்படி பெண் கேட்க ராம்குமாருடன் அவரது குடும்பத்தார் சென்றனர்.
ஆனால், சிந்துஜாவின் வீட்டையும் அவரது ஏழ்மை நிலையையும் பார்த்த அவர்கள் அங்கிருந்து திரும்பி விட்டனர். சிந்துஜாவிடம் பழகக் கூடாது என பெற்றோர் கண்டித்துவிட்டதால் ராம்குமார் அவருடன் பழகுவதை நிறுத்திவிட்டார்.இதனால் சிந்துஜா மனமுடைந்தார். இருப்பினும் தனது கையை பிளேடால் அறுத்துக் கொண்டு தற்கொலை செய்யும் வீடியோவை வாட்ஸ் ஆப்பில் ராம்குமாருக்கு அனுப்பியுள்ளார். எனினும் ராம்குமார் போன் செய்யாததால் விஷம் குடித்தார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் கடந்த 10 நாட்களாக மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிந்துஜா, கடந்த புதன்கிழமை மாஜிஸ்திரேட் முன்பு தனது தற்கொலைக்கு காதலன் ராம்குமார் தான் காரணம் என்றும் ஏழ்மையை காரணம் காட்டி, ராம்குமார் தன்னை விட்டு பிரிந்ததாகவும், காதலை மீறிய உறவு தங்களுக்குள் இருந்ததாகவும், சிந்துஜா தனது மரண வாக்குமூலத்தில் தெரிவித்துவிட்டு உயிரிழந்துவிட்டார்.




