நாட்டில் மீண்டும் அதிகரிக்கப்போகும் அரிசியின் விலை! வெளியாகியுள்ள விலைப்பட்டியல்!
நாட்டில் மீண்டும் அரிசியின் விலை அதிகரிப்பதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பாரியளவில் அரிசி உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள் ஒரு கிலோகிராம் கீரி சம்பாவின் விலையை 40 ரூபாவினாலும், சம்பா மற்றும் நாட்டரிசி என்பவனவற்றின் விலைகளை கிலோகிராம் ஒன்றுக்கு 15 ரூபாவினாலும் உயர்த்தியுள்ளதாக இலங்கை அரிசி உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் முதித பெரேரா தெரிவித்துள்ளார்.
அரிசிக்கான விலை கட்டுப்பாட்டை நீக்கியமையானது கோழிகளை பாதுகாக்க அவற்றை நரியிடம் ஒப்படைப்பதற்கு நிகரானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டின் பாரிய அரிசி உற்பத்தியாளர்கள் சிலர் மட்டும் அரிசி விலையை நிர்ணயம் செய்யும் நிலைமை உருவாகியுள்ளது.
குறைந்த விலையில் நெல்லைக் கொள்வனவு செய்து அரிசி ஆலையில் உற்பத்தி செயன்முறை நடைபெறும் போது வெளியில் நெல் விலையை உயர்த்துவதே அரிசி மாபீயாவாகும்.
இந்த விலை உயர்வு காரணமாக கீரி சம்பா ஒரு கிலோகிராம் 210 ரூபாவிற்கும், சம்பா அரிசி ஒரு கிலோகிராம் 155 ரூபாவிற்கும், நாடு அரிசி ஒரு கிலோகிராம் 130 ரூபாவிற்கும் உயர்த்தப்பட்டுள்ளது என முதித பெரேரா தெரிவித்துள்ளார்.